Ad Widget

தகாத உறவு: யாழ் இளைஞன் சிறையில்!

யாழில் 36 வயதான சட்டத்தரணியின் மனைவியுடன் ஏற்பட்ட காதல் போதையில் 26 வயதான இளைஞன் ஒருவன் சிறைக்குச் சென்றதுடன் தனது 40 இலட்சம் ரூபாவையும் இழந்துள்ளார்.
இரத்மலானைப் பகுதியில் வசிக்கும் சட்டத்தரணி ஒருவருடைய 36 வயதான மனைவியுடன் புடவைக்கடையில் வேலை செய்யும் யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவன் அந்தரங்கத் தொடர்பைப் பேணி வந்துள்ளான். இதனால் சட்டத்தரணியின் மனைவிக்கு தனது சம்பளம் உட்பட உழைக்கும் பணம் அத்தனையும் கொடுத்து வந்ததாகத் தெரியவருகின்றது.

இந் நிலையில் கடந்த வாரம் இருவரும் யாழ்ப்பாணம் தென்மராட்சி நுனாவில் பகுதியில் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்குமிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு வீதியில் நின்று சண்டை போட்டுள்ளனர். இதனைக் கண்ட பொதுமக்கள் பொலிசாருக்குத் தெரிவிக்கவே பொலிசார் அங்கு விரைந்து சென்றுள்ளனர்.

அப்போது சட்டத்தரணியின் மனைவி தன்னை இளைஞன் கடத்த முற்படுவதாக பொலிசாருக்கு பொய் வாக்குமூலம் கொடுத்தவுடன் பொலிசார் இளைஞனைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் சாவகச்சேரி நீதிமன்றி ஆயர்ப்படுத்தப்பட்ட போது 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதன் பின்னர் இளைஞர் சார்பாக ஆயரான சட்டத்தரணி குறித்த குடும்பப் பெண் தொடர்பான விபரங்களையும் கைத்தொலைபேசியில் இவர்கள் பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் குறித்த பெண்ணுக்கு இளைஞன் அனுப்பிய பணத்திற்கான ஆதாரங்கள் அனைத்தையும் சாவகச்சேரி நீதவானுக்கு சமர்ப்பித்த போது வழக்கின் உண்மைத் தன்மையை அறிந்த நீதவான் குறித்த இளைஞனுக்கு பிணை வழங்கியுள்ளார்.

Related Posts