Ad Widget

தற்காலிக வீடுபோதும் : ஒன்றரை மாதக் குழந்தையின் தந்தை மன்றாட்டம்

நிரந்தர வீடு தேவையில்லை தற்காலிக வீட்டைடொன்றை அமைத்து தந்தால் போதும் என கிளிநொச்சி – சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த கும்பஸ்தர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வீட்டுச் சுவருக்கு முட்டுகொடுத்த தடியை எடுத்துவிட்டால் சுவர் விழுந்து விடும் இதுதான் எமது நிலை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

home

யுத்தப் பாதிப்புக்களால் மீளமுடியாமல் தவிக்கும் தமக்கு இயற்கையும் இடையூறு விளைவிப்பதாக ஒன்றரை மாதக் குழந்தையுடன் ஆபத்தான கொட்டில் ஒன்றில் வசிக்கும் தேவராசா தவனேசன் வேதனையுடன் தெரிவித்தார்.

கடந்தவாரம் பெய்து கடும் மழையினால் நாட்டின் பல்வேறு பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்டத்திலும் அதிக கூடிய மழை வீழ்ச்சியாக 373 மில்லி மீற்றர் பெய்து வரலாற்று பதிவை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறு பெய்த கடும் மழையால் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களும் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் உள்ள சிவபுரம் கிராமத்தில் உள்ள 315 வரையான குடும்பங்களை ஏனையவர்களுடன் ஒப்பிடுகையில் மிகமோசமான பாதிப்புக்களை சந்தித்துள்ளனர்.

குறித்த 315 வரையான குடும்பங்களுக்கும் காணிப்பிணக்கு காரணமாக வீட்டுத்திட்டம் கிடைக்காததால் தற்காலிய வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சிவபுரம் எட்டாம் ஒழுங்கையில் உள்ள நான்காம் இலக்க கொட்டில் ஒன்றில் வசிக்கும் தேவராசா கூலித் தொழிலாளியாக காணப்படுகின்றார்.

ஒன்றரை மாத பெண் குழந்தையுடன் தவனேசன் வசிக்கும் கொட்டிலுக்குள் வெள்ளம் புகுந்ததன் காரணமாக வீட்டின் முன்பக்க மண் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது.

மறு பக்கமுள்ள மற்றொரு மண் சுவர் மழை நீரில் ஊறியுள்ளதாகவும், எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்துடன் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தேவராசா கவலையுடன் தெரிவித்தார்.

குறித்த சுவருக்கு ஒரு தடியொன்றை முட்டுக்கொடுத்து வைத்தப்படி ஒன்றரை மாத குழந்தையுடன் வசித்து வருவதாகவும், அந்த சுவருக்கு அருகில் குழந்தையின் தொட்டில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாளாந்தம் கூலி தொழில்செய்து வாழ்க்கை நடத்தும் தமக்கு பாதிக்கப்பட்டுள்ள வீட்டினை புனரமைக்கவோ அல்லது மேலதிகமாக எதனையும் செய்வதற்கு தம்மிடம் வசதி இல்லை எனவும் தேவராசா தெரிவித்தார்.

சிவபுரம் கிராமத்தில் வாழ்கின்ற மக்கள் தமக்கு நிரந்தர வீட்டுத்திட்டம் பெற்றுதருமாறு கோரும் நிலையில், தற்காலிக வீட்டைடொன்றை அமைத்து தந்தால் போதும் என கூலித் தொழிலாளி தேவராசா கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts