Ad Widget

இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் பாமாலை வெளியீட்டு நிகழ்வு

தென்னிந்திய கலைஞர்கள் பாடிய யாழ்ப்பாணத்தின் இணுவிலில் அமைந்துள்ள சரித்திரப் பிரசித்தி பெற்ற ஶ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் திருவருளை எடுத்துரைக்கும் ஶ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் பாமாலை – 2 இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா தொடங்கும் நாளான எதிர்வரும் சனிக்கிழமை (28.05.2016) இரவு 7:00 மணிக்கு ஆலயத்தின் முன்றலில் நடைபெறும்.

ஈழத்தின் கவிஞர்கள் இயற்றியுள்ள இந்த பாடல்களை தென்னிந்திய கலைஞர்களின் பின்னணி இசையில் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பிரபல கர்நாடக கலைஞரும் பின்னணிப் பாடகருமான உன்னிகிருஸ்ணன் உள்ளிட்ட கலைஞர்கள் பாடியுள்ளனர்.

வெளியீட்டு நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஶ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் அடியார்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

இந்த ஆலயமானது 600 ஆண்டு கால பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு பெறுகின்ற அதேவேளையில் இலங்கையை ஆண்ட மன்னர்களில் ஒருவரான ஶ்ரீ பரராஜசேகர மன்னனால் வழிபாடு செய்யப்பட்ட ஆலயங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

Pillaiyar

Related Posts