வடக்கு மாகாண சபையின் அமைச்சுப் பொறுப்புக்களில் இன்று அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிய வருகின்றது. வடமாகாண அமைச்சர்களுக்கு கூடுதல் அமைச்சுப் பொறுப்புக்கள் முதலமைச்சரால் கொடுக்கப்பட்டு இருந்தது.
அதில் சில பொறுப்புக்களை முதலமைச்சர் எடுத்து தனக்கு கீழேயும், சில பொறுப்புக்களை வேறு வடமாகாண சபை உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று மாலை 6.00 மணியளவில் வடக்கு மாகாண ஆளுநர் ரொஜினோல்ட் குரே முன்னிலையில், புதிய அமைச்சரவை சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளது.