Ad Widget

முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் விளக்கமறியலில்

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தாஜூடின் மரணித்த காலப் பகுதியில் கொழும்பிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இவர் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

2012ம் ஆண்டு மே 17ம் திகதி இடம்பெற்ற தாஜூடினின் மரணத்தை சாதாரண விபத்தாக முன்னர் உறுதிப்படுத்தியிருந்தனர்.

எதுஎவ்வாறு இருப்பினும் குறித்த மரணம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகளும் சந்தேகங்களும் இருந்து வந்த நிலையில், சம்பவம் இடம்பெற்று சுமார் நான்கு வருடங்களின் பின்னர் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் இது குறித்த விசாரணைகளை மீள ஆரம்பித்து குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்தது.

இதனையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இது கொலை என நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

இந்தநிலையில், தாஜூடினின் மரணம் தொடர்பில் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க, சாட்சிகளை மறைக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Posts