Ad Widget

இந்தியாவில் இருந்து வருகைதரும், பாதபராமரிப்பில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற வல்லுநர்களால் நீரிழிவு நோயாளர்களுக்கான இலவச கருத்தரங்கு

எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ். மருத்துவ பீடத்தில் (கூவர் கேட்போர் கூடம்) காலை 9 மணிக்கு நீரிழிவு நோயாளர்களுக்கான பாதப் பராமரிப்பு மற்றும் பாதணிகள் உபயோகம் சம்பந்தமான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்தியாவில் இருந்து வருகைதரும், பாதபராமரிப்பில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற வல்லுநர்களால் நீரிழிவு நோயாளர்களுக்கான கருத்தரங்கு நடத்தப்பட உள்ளது.

பாத பராமரிப்புபற்றி அறிந்து கொள்ள விருப்பமுடைய நீரிழிவுநோயாளர்களும், பாதங்களில் பாதிப்புள்ள நீரிழிவு நோயாளர்களும் இந்தக் கருத்தரங்கில் இலவசமாகப் பங்கு பற்றலாம்.

பாதணிகள் தேவைபற்றிய ஆய்வுகள் நீரிழிவுநோயாளர்களுக்கு இலவசமாகச் செய்து கொடுக்கப்படும்.

இந்த ஆய்வைச் செய்ய விரும்பும் நோயாளிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள நீரிழிவு சிகிச்சை நிலையத்தில் (Diabetes Centre)இருந்து பெறப்பட்ட உரிய கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

நீரிழிவு நிலையத்தில் 24 ஆம் திகதியிலிருந்து 26 ஆம் திகதி வரை பதிவுகளை மேற்கொள்ள முடியும் (காலை 8 மணி தொடக்கம் மாலை.4 மணி வரை)
தொடர்பு இல:0212220179

Related Posts