Ad Widget

ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகர் வடக்கு முதலமைச்சருடன் சந்திப்பு

2.1 மில்லியனுக்கு சூழலுக்கு ஏற்புடையதற்ற வீட்டினை கட்டுவது குறித்து தமக்கும் புரியவில்லை என ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகர் டேவிட் டலி நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

uk-embassdor-vikky

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட உயர் ஸ்தானிகர் டேவிட் டலி வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த வடமாகாண முதலமைச்சர்,

அந்த சந்திப்பின் போது, வடமாகாணமும் மத்திய அரசாங்கமும் இணைந்து செயற்பட வேண்டுமென்ற எண்ணம் இருக்கின்றது. ஆதற்கு தடையாக இருப்பது என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, 13வது திருத்த சட்டத்தில் இருக்கும் குறைபாடுகளை எடுத்துக் கூறியுள்ளேன். அந்த குறைபாடுகளின் நிமித்தம் எமது உறவுகள் பலவிதத்திலும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக மத்தியில் இருந்து தரப்படும் வேலைத்திட்டங்கள் தான்தோன்றித்தனமாக தரப்படுகின்றன. எம்முடன் கலந்துரையாடி எமக்கான வேலைத் திட்டங்களை தராமல் இருப்பதே பெரும் குறையாக இருக்கின்றது என கூறியிருந்தேன் என்றார்.

அத்துடன் வடமாகாணத்தில் நிலவும் வீட்டுப் பிரச்சினைகள் பற்றியும் எடுத்துக் கூறினேன் என்றார்.

ஐக்கிய இராச்சியத்தினால் 20 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. மேலும் 3 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் 2.1 மில்லியன் பாவிக்கப்படுவது குறித்து தமக்கு புரியவில்லை என்றும், ஏனெனில், தமது அரசாங்கத்தினால் தசம் 25 மில்லியனுக்கு தரமான வீட்டினை கட்டி முடித்துள்ளதாக சுட்டிக் காட்டியதாக கூறினார்.

Related Posts