Ad Widget

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; முல்லைத்தீவில் பூரண கடையடைப்பு! முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

mullai

மே 18 நாளான இன்று, வடக்கு மாகாணத்தில், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படும் என்று, வர்த்தக சங்கங்கள் அறிவித்தல் விடுத்தன.

இதனையடுத்து, ‘வன்முறைகள், படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர்நீத்த உறவுகளை விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைவுகூர்ந்து அஞ்சலிப்பதை, தமது தேசியக் கடமையாக எனத் தெரிவித்து முல்லைத்தீவில் இன்று கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எமது உறவுகளின் ஆத்ம இழப்புகளுக்கு சர்வதேச நீதி வேண்டி, வர்த்தக சங்கங்களின் உறுப்பினர்கள் அனைவரையும் இன்று, தத்தமது வர்த்தக நிலையங்களை மூடியுள்ளனர்.

தவிர்த்துக்கொள்ள முடியாத சூழ்நிலைகள் காரணமாகக் கலந்துகொள்ள முடியாதவர்கள், தத்தமது இல்லங்களில் நெய்விளக்கேற்றி, போரில் உயிர்நீத்த உறவுகளை உணர்வுபூர்வமாக அஞ்சலிக்குமாறு முல்லைத்தீவு வர்த்தக சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் ஏழாம் ஆண்டு நினைவு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts