சுங்க அதிகாரிகளை ஏமாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உண்மையான பெறுமதியை காட்டாமல் குறைந்த பெறுமதியை காட்டி அதிசொகுசு வாகனம் ஒன்றை இறக்குமதி செய்துள்ளதாககுற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

86

சுங்க அதிகாரிகளை கோடிட்டு இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

எனினும் இந்த உறுப்பினர் யார் என்ற தகவலை செய்தித்தாள் குறிப்பிடவில்லை. பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டு Land Rover Diesel STA/Wagon Sports ABIO Dynam SDV6 என்ற வாகனமே அண்மையில் இறக்குமதி செய்யப்பட்டது.

இது மொத்தத்தில் புதிய வாகனம் என்ற போதும் பயன்படுத்தப்பட்ட வாகனம் என்ற அடிப்படையில் அதன் இறக்குமதிக்கு 1750 ரூபா மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 60,500 அமெரிக்க டொலர்களுக்கான வாகன அனுமதி வரையறையில் குறைந்த மதிப்பீட்டை செய்து குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுங்க நடைமுறைகளை மீறியுள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த வாகனம், 16,778,778 ரூபா பெறுமதியானது.

இந்தநிலையில் குறை மதிப்பு செய்யப்பட்டமையால் சுங்கத் திணைக்களத்துக்கு 2,652,636 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் மதிப்பிட்டுள்ளது.

Related Posts