Ad Widget

குறைநிரப்பு பிரேரணை மீதான வாக்கெடுப்பு உரிய வகையில் இடம்பெறவில்லை!

நிதி அமைச்சின் குறைநிரப்பு பிரேரணையை அங்கீகரிப்பதற்கான வாக்கெடுப்பு உரிய வகையில் இடம்பெறவில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்படி வாக்கெடுப்பின்போது குளறுபடி இடம்பெற்றது என எதிரணியால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. தலைமையில் நால்வரடங்கிய குழுவை சபாநாயகர் அமைத்தார்.

இந்நிலையில் விசாரணைக்குழுவின் அறிக்கை நேற்று சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது இதையடுத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது வாக்கெடுப்பு முறையாக நடைபெறவில்லை எனக் கூறப்பட்டது. ஆனால், குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுவிட்டதால் ஒன்றும் செய்ய முடியாது என சபை முதல்வரான அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.

ஆனால், தினேஷ் குணவர்தன எம்.பி. இதை ஏற்க மறுத்தார். குறித்த பிரேரணையை மீள சமர்ப்பித்து அதை சட்டபூர்வமாக நிறைவேற்றுமாறு கோரியுள்ளார்.

இது பற்றி இன்று புதன்கிழமை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடிவிட்டு, பிரதமரிடம் ஆலோசனைபெற்றுவிட்டு முடிவொன்றை அறிவிப்பதாக இதன்போது சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts