Ad Widget

வலசைப் பறவைகளின் வருகை வடக்கு மண்ணுக்கு வரப்பிரசாதம்

பூமியின் வடக்குப்பகுதியில் பனிபடிய ஆரம்பிக்கும்போது அப்பிரதேசங்களில் வாழுகின்ற பறவைகள் இரைதேடுவதற்காக வெப்பப்பிரதேசங்களை நோக்கி கூட்டம் கூட்டமாகக் குடிபெயர்கின்றன. குளிர்விலகும்போது தங்கள் சொந்த இடங்களுக்கு பாதை தவறாமல் திரும்பிச்செல்கின்றன. வலசை போகும் இந்தப் பறவைகள் வந்து தங்கிச் செல்லும் இடமாக இலங்கையில் வடக்கு மாகாணத்தில் பல இடங்கள் உள்ளன. இது வடக்கு மண்ணுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு சுற்றாடல் அமைச்சு வலசைப் பறவைகள் பற்றிய மூன்று நாள் செயலமர்வையும் வெளிக்களப் பயிற்சியையும் உலக வலசைப் பறவைகள் தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
வடக்கின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் 100மாணவர்கள் பங்கேற்ற இந்தச் செயலமர்வு மற்றும் வெளிக்களப் பயிற்சியின் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை (15.05.2016) யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடக்கு இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு மாகாணம். யாழ்.குடாநாட்டில் காணப்படும் தொண்டைமானாற்றுக் கடல்நீரேரி, உப்பாற்றுக் கடல்நீரேரி, யாழ்ப்பாணக் கடல்நீரேரிகளின் கரைகளில் கண்டல் மரங்கள் செழித்து வளர்கின்றன. இந்தச்சூழல் பறவைகள் இரைதேடவும், தங்கிச்செல்லவும் வாய்ப்பாக இருப்பதால் உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பறவை இனங்கள் இங்குவந்து சேர்கின்றன.

வடக்கில் பிளமிங்கோ எனப்படும் பூநாரைகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதனால் பறவை ஆய்வாளர்களின் கவனமும் சுற்றுலாப் பயணிகளின் கவனமும் வடக்குக்கு வருகின்ற வலசைப்பறவைகள் மீது இப்போது திரும்ப ஆரம்பித்துள்ளது.

வலசைப்பறவைகள் வெறுமனே எமது பொழுதுபோக்குக்காகவும், ஆய்வுக்கான ஒரு துறையாகவும் மட்டும் அல்லாமல் வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார வருவாயை ஈட்டித்தரும் சூழற் சுற்றுலாவை விருத்தி செய்யவும் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன்,யாழ்.பல்கலைக்கழக விலங்கியல்துறைத் தலைவர் இரா.ஞானேஸ்வரன் மற்றும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் அ.அகிலதாஸ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

14

15

16

17

18

19

20

Related Posts