எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் சீராகும் – லிட்ரோ

இலங்கையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களுக்குள் சீராகும் என லிட்ரோ லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தற்போது தினமும் சுமார் 80,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் நவம்பர் 1ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நான்கு கப்பல்கள் மூலம் மொத்தம் 15,600 மெட்ரிக் தொன் திரவப் பெற்றோலிய வாயு (LPG) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நவம்பர் மாதத்தில் வீட்டு மற்றும் வர்த்தகப் பயன்பாட்டுக்காக சுமார் 30 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Posts