Ad Widget

பிர­பா­கரன் மறு அவ­தாரம் எடுத்தால் எவ­ரையும் குற்­றம்­சாட்­ட ­மு­டி­யாது

தமிழ் சமூ­கத்தின் மீது நம்­பிக்­கை­யின்றி போரினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களுக்கு மத்­தியில் இரா­ணு­வத்­தி­னரை தொடர்ந்தும் நிறுத்­து­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சி­களை மேற்­கொள்­ளு­மாயின் மற்­றொரு பிர­பா­கரன் மறு அவ­தாரம் எடுத்தால் எவ­ரையும் குற்­றஞ்­சாட்­ட­மு­டி­யாது என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் சுட்­டிக்­காட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அதே­நேரம் சமஷ்டி பிரி­வினை அல்ல என்­பதை வலி­யு­றுத்­தி­யவர் மத்­திய அர­சாங்­கத்தின் நேர­டித்­த­லை­யீ­டு­களால் வடக்கு மாகா­ண­சபை தொடர்ந்தும் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் குற்­றம்­சாட்­டி­யுள்ளார்.

தேசத்தை கட்­டி­யெ­ழுப்­புதல் மற்றும் நல்­லி­ணக்கம் தொடர்­பாக எழுத்­தாளர் குசால் பெரே­ராவின் நூல் வெளி­யீடும் திறந்த கலந்­து­ரை­யா­ட­லொன்றும் கொழும்­பி­லுள்ள இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் நேற்று வியா­ழக்­கி­ழமை நடை­பெற்­ற­போது பிர­தம பேச்­சா­ள­ராக கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தி­ருந்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

தேசத்தை கட்­டி­யெ­ழுப்­புதல் தொடர்­பாக அவ­தானம் செலுத்­து­கையில் இலங்கை என்­றொரு தேச­முள்­ளது. அதனை கட்­டி­யெ­ழுப்­ப­வேண்­டிய தேவை எமக்கு உள்­ளது. தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­புதல் தொடர்­பாக நாம் கலந்­தா­லோ­சிக்­கி­ன­ற­போதும் நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வது தொடர்­பா­கவே நாம் தற்­போது ஆலோ­சிக்­கின்றோம்.

பல்­வே­று­பட்ட வேறு­பா­டு­க­ளுக்கு மத்­தியில் நாட்­டினை கட்­டி­யெ­ழுப்­பு­வது தொடர்­பாக தற்­போது இங்கு பேசப்­ப­டு­கின்­றது. இலங்­கைத்­தே­சத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­கின்றோம் என்ற நிலைப்­பாட்டில் நாம் இணக்கம் கொண்­டி­ருக்­க­வில்லை.

தேசத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தா­னது ஒரு பாரிய கட்­ட­ட­மொன்­றினை பல்­வேறு தரப்­பி­னரின் ஒத்­து­ழைப்­புடன் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு சம­னா­ன­தாகும். ஆதற்கு பல்­வேறு தரப்­பி­னரின் பங்­க­ளிப்­புக்கள் அவ­சி­ய­மா­கின்­றன. அத­னைப்­போன்றே தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­த­லையும் கூற­மு­டியும்.

தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­தலும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பாக நோக்­கும்­போது சிதை­வு­களை கொண்­டி­ருக்கும் கட்­ட­ட­மொன்றை மீளவும் நிர்­மா­ணிப்­ப­தற்குச் சம­மா­ன­தாகும்.

Related Posts