Ad Widget

உகாண்டா ஜனாதிபதி பதவியேற்பில் கலந்து கொண்ட மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உகாண்டா ஜனாதிபதியின் பதிவியேற்பு விழாவில் நேற்று (12) கலந்து கொண்டார்.

uganda

உகாண்டா அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே முன்னாள் ஜனாதிபதி இந்த விழாவில் கலந்து கொண்டதாக அவரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் இடம் பெற்ற அந்நாட்டு ஜனாதிபதி தேர்தலில் 61% வாக்குகள் பெற்று யொவேரி கஜூடா முசவேனி உகாண்டாவின் ஜனாதிபதியாகதேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதே வேளை , குறித்த ஜனாதிபதி தேர்தலில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட கிஸா பெசிக்ஸே அந்நாட்டு காவற்துறையினரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இணையத்தளத்தில் கிஸா பெசிக்ஸே பதவியேற்பது போன்ற ஒரு காணொளி காட்சி பிரசித்தி பெற்றுள்ளதை தொடந்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Posts