விடுதலைப் புலிகளின் செயற்கைக் காடுகள் அழிக்கப்படுகின்றன!

வட மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் நிலப்பரப்பு அளவில் முதலிடத்தில் இருப்பது முல்லைத்தீவு மாவட்டமாகும். இலங்கையிலேயே நிலப் பயன்பாட்டில் பெரும்பகுதி காடுகளால் நிறைந்துள்ள மாவட்டங்களில் முல்லைத்தீவு முக்கியமானது. இங்குள்ள காடுகளில் வைர மரங்களான முதிரை, பாலை, வீரை, காட்டாமணக்கு, ஒதி முதலிய மரங்கள் இயற்கையாக காணப்படுகின்றன. அவற்றை விட. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தேக்கு மரங்கள்...

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக சதித்திட்டம்!

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட சில அமைச்சர்களுக்கு எதிராக சில உறுப்பினர்கள் சதித்திட்டம் தீட்டி வருவதாக சில அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் வட மாகாண முதலமைச்சர் மற்றும் சில அமைச்சர்களுக்கு எதிராகச் செயற்படுபவர்களுக்கு சலுகைகள் பெற்றுத் தருவதாக அவர்கள் பேரம் பேசி வருவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்....
Ad Widget

போர்முடிவடையும்வரை ஈ.பி.டி.பிக்கு ஆயுதங்களை வழங்கியது அரசு!! கோத்தா

போர் முடிவடையும் வரை ஈ.பி.டி.பி.க்கு அரசாங்கம் ஆயுதங்களை வழங்கியதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய தெரிவித்துள்ளார் கொழும்பில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் மஹிந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திடம் கையளித்த போது...

வடமாகாண இலவச அம்பியூலன்ஸ் சேவையை தரமுயர்த்த நடவடிக்கை

வடக்கு மகாணத்தில் இலவச அம்பியூலன்ஸ் சேவையை தரமுயர்த்த வட மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சு, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இலங்கையிலே முதன் முதல் இலவச அரச அம்பியூலன்ஸ் சேவை, வட மாகாண சுகாதார அமைச்சினால் கடந்த ஜனவரி மாதம ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்த சேவையை மக்கள்...

ஈழக் கனவை தோல்வியடைய செய்வோம்

நாட்டுக்குள்ளும் வெளியேயும் உள்ள ஈழம் என்ற கனவு மற்றும் விடுதலை புலிகளின் சித்தாந்தத்தை நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இல்லாதொழிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவிட்டால் வடக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கும் நிலை உருவாகலாம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். தெஹிவளை - கல்சிசை நகரமண்டபத்தில்...

காணாமற்போனமைக்கான சான்றிதழ்: சட்டமூல வரைவுக்கு அங்கிகாரம்

காணாமற்போனமைக்கான சான்றிதழ்களை வழங்குவதற்கான சட்டமூலத்தின் வரைவுக்கு, அமைச்சரவையினால் நேற்றுச் செவ்வாய்க்கிழமை, அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இறப்புகளைப் பதிதல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம், 2010 இல. 19 என்ற சட்டத்தினைத் திருத்தல் தொடர்பாகவே, இந்தச் சட்டமூலம் குறிப்பிடுகிறது. அமைச்சரவையினால் இது அங்கிகாரமளிக்கப்பட்டுள்ள நிலையில், இது வர்த்தமானி மூலம் வெளியிடப்படுமெனவும், நாடாளுமன்றத்தில் இதைச் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகுமெனவும், வெளிநாட்டு அலுவல்கள்...

வெடிவிபத்து குறித்து ஆராய முப்படைக் குழு களத்தில்! நாடாளுமன்றில் பிரதமர்

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கென முப்படையினரடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்தக் குழுவுக்கு பொலிஸ் தரப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அத்துடன், விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள்...

த.தே.கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டம் 25 இல் கொழும்பில் நடக்கும்! சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது என்று அந்தக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே 25 ஆம் திகதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. "தமிழ்த்...

உங்களுக்கு ஜனாதிபதி மாளிகையை நேரில் பார்வையிட விருப்பமா?

கொழும்பு - கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை பார்வையிடும் வாய்ப்பை மக்களுக்கு வழங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இதன்படி நாளை முதல் எதிர்வரும் 14ம் திகதி வரை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொது மக்கள் அனைவருக்கும், ஜனாதிபதி மாளிகை மற்றும் கோல்டன் பூங்காவைப் பார்வையிட முடியும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை...

கவனயீர்ப்பு கையெழுத்துப் போராட்டம்

முன்னிலை சோஷலிசக் கட்சியின் ஏற்பாட்டிலான கவனயீர்ப்பு கையெழுத்து போராட்டம், யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்றது. அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் அடக்குமுறைச் சட்டங்களை சுருட்டிக்கொள்ள வேண்டும் மற்றும் அனைத்து அரசியல் பழிவாங்கல்களையும் நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த கையெழுத்து போராட்டம் நடத்தப்பட்டது. இதில்,...

மாணவியைக் காணவில்லை!

யாழில் சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரைக் காணவில்லை என, பெற்றோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 16 வயதான மாணவி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. மாலையில் மேலதிக வகுப்புக்காக சென்ற இவர், இரவாகியும் வீடு திரும்பாத நிலையில், நேற்று திங்கட்கிழமை இரவு 11.00...

இராணுவ முகாம்களை மக்கள் அற்ற பகுதிகளுக்கு மாற்ற வேண்டும்!

அரசாங்கம் உடனடியாக இராணுவ முகாம்களை பொது மக்கள் அற்ற இடங்களுக்கு மாற்ற வேண்டுமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். கொஸ்கம - சலாவ பகுதியில் உள்ள இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்புச்...

கே.கே.எஸ் கடற்பாறையில் இருந்து 158 கிலோ கஞ்சா மீட்பு

காங்கேசன்துறை கடற்பகுதியில் பாறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 158 கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா, கடற்படையினரால் இன்று செவ்வாய்க்கிழமை (07) மீட்கப்பட்டு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக காங்கேசன்துறை பொலிஸார் கூறினர். கைப்பற்றப்பட்ட கஞ்சா சுமார் 31.6 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையவை எனவும், இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடல்...

சேதமடைந்த வீடுகளை அரச நிதியை பயன்படுத்தி புனரமைத்து கொடுக்குமாறு பிரதமர் உத்தரவு

கொஸ்கம, சாலவ பகுதியில் ஏற்பட்ட இராணுவ ஆயுதக் களஞ்சியசாலை அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளை அரச நிதியை பயன்படுத்தி புனரமைத்து கொடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். கொஸ்கம பகுதிக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீயினாலும் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிச் சம்பவத்தினாலும் ஏற்பட்ட சேதங்களை ஆய்வுசெய்தார். இதனையடுத்து அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மற்றும்...

இவர்களை தெரியுமா?? பொதுமக்களிடம் உதவிகேட்கும் பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் கடந்த கால வாள் வெட்டு சம்பவங்கள், ஆட்கடத்தல், கப்பம் கோரல் உள்ளிட்ட பல சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக மூன்று சந்தேக நபர்களை இனங்காட்டி தருமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சமூக விரோத செயல்கள் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட தேவா, சன்னா, பிரகாஸ் ஆகியோர்...

பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி எம்.இளஞ்செழியன்!

2003 ஆம் ஆண்டு கல்முனை மாளிகைக்காட்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின்முதலாவது எதிரிக்கு யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன், பிரதம நீதியரசரின் விசேட நியமனத்தின் கீழ் கல்முனை மேல்நீதிமன்றில் இந்தக் கொலை வழக்கின் தீர்ப்பினை நேற்று வழங்கியமை விசேட அம்சமாகும். குறிக்கப்பட்ட வழக்கில் இறந்துபோன...

1000கோடி பெறுமதியான வெடிபொருட்கள் நாசம்!

கொஸ்கம-சலாவ இராணுவமுகாமில் ஏற்பட்ட வெடிவிபத்தால் 1000 கோடி பெறுமதியான வெடிபொருட்கள் வெடித்து அழிந்துபோயுள்ளதாக ஆங்கில நாழிதள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விபத்தில் 9000 தொன் வெடிபொருட்கள் முற்றாக அழிந்து நாசமாகியுள்ளன. இதன் பெறுமதி 1000கோடியாகும். இந்த வெடிபொருட் களஞ்சியசாலை சரியான நிபுணத்துவத்துடன் அமைக்கப்படவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திரிக்கா ஆட்சிக்காலத்தில் 1990 களில் சலாவ பகுதியில்...

நாவற்குழியில் இராணுவக் குடியிருப்பு!

யாழ்நகரின் நுழைவாயிலான நாவற்குழியில் ‘சிங்கள ராவய’ என்ற பெயரில் இராணுவக் குடியிருப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலத்திலேயே இக்கிராமத்துக்கு சிங்கள ராவய என்ற பெயர்ப்பலகை பொறிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் கழிந்த நிலையில் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் திட்டத்தின்படியே இக்கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கிராமம் அமைக்கப்பட்டு தற்போது அமைதியாகவும் எந்தவொரு எதிர்ப்புமின்றி விரிவாக்கப்பட்டுவருகின்றது. தற்போதைய அதிபர்...

ஜெனீவா வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, ஐ.நாவில் முறையிடுவோம்!

ஐநாவில் நிறைவேற்றுவதாகத் தெரிவிக்கப்பட்ட பல வாக்குறுதிகளை சிறீலங்கா அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றவில்லையென ஐநாவில் முறையிடப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் வாக்குறுதியளித்தபோதிலும் ஒருசில காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பெருமளவிலான அரசியல் கைதிகளை விடுவிப்பதாக வாக்குறுதி அளித்தபோதிலும் ஒரு சில கைதிகளே விடுதலைசெய்யப்பட்டனர் எனவும் சுமந்திரன்...

மீள்குடியேற்ற விவகாரம்: தாமதம் ஏற்பட்டாலும் முடிவில் மாற்றமில்லை

'யாழ்ப்பாணம், உயர்பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட மயிலிட்டி பிரதேசம் தொடர்பில், இராணுவத்தினர் இதுவரையில் தமது எதிர்ப்பினையோ அல்லது காணி விடுவித்தல் தொடர்பான மற்றுப்பினையோ முன்வைக்கவில்லை. வடக்கின் மீள்குடியேற்றம் தொடர்பில் நான், கடும் சிரத்தையுடன் இருக்கின்றேன். வடக்கு மக்களுக்கு மீள்குடியேற்றம் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்த மாற்றமும் இல்லை. சிலவேளைகளில் சிறிய தாமதம் ஏற்படலாம்' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...
Loading posts...

All posts loaded

No more posts