ஐநாவில் நிறைவேற்றுவதாகத் தெரிவிக்கப்பட்ட பல வாக்குறுதிகளை சிறீலங்கா அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றவில்லையென ஐநாவில் முறையிடப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் வாக்குறுதியளித்தபோதிலும் ஒருசில காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பெருமளவிலான அரசியல் கைதிகளை விடுவிப்பதாக வாக்குறுதி அளித்தபோதிலும் ஒரு சில கைதிகளே விடுதலைசெய்யப்பட்டனர் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பாக ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளரிடமும், பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் தெளிவு படுத்தப்போவதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.