Ad Widget

விடுதலைப் புலிகளின் செயற்கைக் காடுகள் அழிக்கப்படுகின்றன!

வட மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் நிலப்பரப்பு அளவில் முதலிடத்தில் இருப்பது முல்லைத்தீவு மாவட்டமாகும்.

இலங்கையிலேயே நிலப் பயன்பாட்டில் பெரும்பகுதி காடுகளால் நிறைந்துள்ள மாவட்டங்களில் முல்லைத்தீவு முக்கியமானது.

இங்குள்ள காடுகளில் வைர மரங்களான முதிரை, பாலை, வீரை, காட்டாமணக்கு, ஒதி முதலிய மரங்கள் இயற்கையாக காணப்படுகின்றன.

அவற்றை விட. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தேக்கு மரங்கள் நாட்டப்பட்டு செயற்கை காடுகளையும் உருவாக்கினார்கள்.

அத்தோடு பனைகளும், தென்னைகளும் கொண்ட தோப்புக்கள் நிறைய உருவாக்கினார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பட்டில் இருந்த போது காடுகள் அழிந்து விடாமல் மிகவும் சிறப்பாக பாதுகாக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்பொழுது முல்லைத்தீவு மாவட்டத்தில் பெருமளவு காட்டு மரங்கள் சட்டவிரோதமாக அழிக்கப்படுகின்றன.

விடுதலைப் புலிகள் உருவாக்கிய தேக்கு மரக் காடுகள் காட்டு இலாகா அதிகாரிகளால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வீட்டு முற்றத்தில் நிற்கும் ஒருமரத்தை வெட்டுவதாக இருந்தாலும்; வீட்டு உரிமையாளர் மர மடுவத்தினரிடம் அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும்.

2009ம் ஆண்டிற்கு பின் காணிகளில் நின்ற ஏராளமான மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளன.

இதைவிட முல்லைத்தீவு மாவட்டத்தில மிக மோசமாகக் காடுகள் அழிக்கப்படுகின்றதை அவதானிக்க முடிகின்றது.

Related Posts