Ad Widget

சேதமடைந்த வீடுகளை அரச நிதியை பயன்படுத்தி புனரமைத்து கொடுக்குமாறு பிரதமர் உத்தரவு

கொஸ்கம, சாலவ பகுதியில் ஏற்பட்ட இராணுவ ஆயுதக் களஞ்சியசாலை அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளை அரச நிதியை பயன்படுத்தி புனரமைத்து கொடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

ranil

கொஸ்கம பகுதிக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீயினாலும் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிச் சம்பவத்தினாலும் ஏற்பட்ட சேதங்களை ஆய்வுசெய்தார்.

இதனையடுத்து அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட தரப்பினருடன் பிரதமர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

இந்த சந்திப்பில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிச் சம்பவத்தை அடுத்து இராணுவ முகாமை சூழ இருந்த பல வீடுகள் அதிர்வுகள் மற்றும் சன்னங்களால் கடுமையாக சேதமடைந்திருந்தன.

Related Posts