- Sunday
- October 4th, 2026
இன்று நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவக்கூடும் என வானிலை அவதானிப்பு நிலையம் அறிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்குப் பகுதி, தென் மாகாணம் மற்றும் தெற்கு கடற் பிரதேசங்களில் கடும் காற்று வீசலாமென தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் நாட்டின் தென்பகுதியில் ஓரளவு மேகக் கூட்டங்களை அவதானிக்க முடியுமெனவும் வானிலை அவதானிப்பு நிலையம் அறிவித்துள்ளது....
யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் நேற்றுமாலை இளைஞர் ஒருவர் மீது கும்பலொன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அதில் படுகாயமடைந்த இளைஞன், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். இராசாவின் தோட்டப் பகுதியைச் சேர்ந்த இராமசேகர் உசானந்தன் (வயது 19) என்ற இளைஞரே தலையில் படுகாயமடைந்துள்ளார். அரசடி பகுதியைச் சேர்ந்த குழுவொன்றுக்கும் கற்புலம் பகுதியைச் சேர்ந்த...
நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமைகளினான தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.
ரஜினி உடல் நிலைப் பற்றி வதந்தி பரப்பிய நபர் மீது நடவடிக்கை கோரி சைபர் க்ரைம் அலுவலகத்தில் இன்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இலங்கையைச் சேர்ந்த தமிழ் இணையதளம் ஒன்று ரஜினி உடல் நிலை குறித்து வதந்தி பரப்பியது. இதைத் தொடர்ந்து வாட்ஸ் ஆப், ட்விட்டர் போன்றவற்றில் அந்த வதந்தி தீயாகப் பரவியது. ரஜினி...
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரட்டப்பட்டதன் பின்னரான அரசியல் தளத்தில் என்றும் பரபரப்புக்கு பஞ்சமில்லை. கடந்த ஆட்சியின் போது பல்வேறு மோசடியில் ஈடுபட்டவர்களை குறித்து சமகால அரசாங்கம் வலை விரித்துள்ள போதிலும், சகல துறைகளிலும் ஊடுருவியுள்ள மஹிந்தவின் விசுவாசிகளால் அவை முறியடிக்கப்பட்டு வருகிறது. தற்போது அரசியல் ரீதியாக காணப்படும் நெருக்கடியான...
கொஸ்கம சாலாவ பகுதியில் ஆயுதக் கிடங்கு வெடித்தமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவிவழங்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம், 27 வருடங்களாக சொந்த இடத்தில் தங்களை மீள்குடியேற்றம் செய்யும் விடயத்தில் மாற்றான் மனப்பான்மையை கடைபிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வலி வடக்கு பிரதேச மீள் குடியேற்றத்தலைவர் அ.குணபாலசிங்கம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். வலி வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட மயிலிட்டி,...
கொழும்பு உள்ள சிறைச்சாலை அதிகாரிகள் பயிற்சி வகுப்பில் உள்ள தமிழ் மாணவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு 40 தமிழர்கள் சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கான பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். அவர்கள் தங்கியுள்ள விடுதியில் புகுந்த 100க்கும் அதிகமான சிங்கள அதிகாரிகளும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கான பயிற்சி பெறும் சிங்கள மாணவர்களும் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்களில் எட்டு...
தென்மராட்சியின் மறவன்புலோ பகுதியில் வெடிபொருள் மீட்கப்பட்ட சம்பவத்தினில் ஆளுநர் சிறிசேன கூரேயின் உதவியாளரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநரான றெஜினோல்ட்குரேயின் வலதுகரமாக செயற்பட்டு வந்த முரளி என அழைக்கப்படும் சிவராசா சிவகுலன் (வயது 29) என்பவரே கொழும்பில் இருந்து வந்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினால் 11ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநராக...
மட்டக்களப்பு- மாவடிவேம்பில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த இராணுவ முகாமில் நேற்றுமாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த சுமார் 15 குண்டுகள் வெடித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு மாவடிவேம்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் கைவிடப்பட்ட இராணுவ முகாமில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் பாரிய தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து...
போர் நடந்த காலகட்டத்தில் வட மாகாணத்தில் கல்வி நிலை முன்னேற்றம் கண்டிருந்து, எனினும் தற்போது கல்வி நிலை வீழ்ச்சி கண்டு வருகிறது என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பரந்தன் தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். வட மாகாணத்தில் கல்வி நிலை வீழ்ச்சியடைவதானது...
முன்னாள் பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பான வரலாற்றுப் பதிவான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ என்ற நூல் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் வெளியிட்டு வைக்கப்படவிருக்கின்றது. போரில் விழுப்புண் அடைந்து ஒரு கண்ணையும், ஒரு கரத்தையும் இழந்த பெண் போராளியான...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை எனவும் ஆனால் நாட்டில் நிலையான தீர்வை எட்டுவதற்கு தமிழ் மக்களின் தனிப்பட்ட அடையாளங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்பது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமையாகும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மையில் சிறிலங்காவின் வடக்கிற்குப் பயணம் செய்த ஐ.நாவிற்கான அமெரிக்காவின் தூதுவர்...
பிரான்பற்றுப் பகுதியிருந்து சுழிபுரம் பகுதிக்கு 58 லீற்றர் கசிப்பை கொண்டு சென்ற சந்தேகநபரை செவ்வாய்க்கிழமை (14) மாலை கைது செய்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். சுழிபுரம் பகுதியில் பொதிகளுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற மோட்டார் சைக்கிளை பொலிஸார் மறித்துச் சோதனை செய்துள்ளனர். இதன்போது, 78 போத்தல்களில் அடைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட கசிப்பு மீட்கபட்டது. கைது செய்யப்பட்ட...
புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கின் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அது பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே, மரபணு அறிக்கை தொடர்பில் கூற முடியும் என ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் நேற்று புதன்கிழமை (15) தெரிவித்தார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, கடந்த மே...
ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் மிகக்குறைந்த பஸ் கட்டணமாக 10 ரூபாயை நிர்ணயிக்குமாறும் ஏனைய கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால், ஜூலை மாதம் 4ஆம் திகதி நள்ளிரவு முதல், பஸ் சேவையை இடைநிறுத்தி சேவை புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அந்த...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரை மிக இலகுவாக எதிர்கொள்வோம் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். "சர்வதேச நாடுகள் இலங்கை அரசு மீதும், ஜனாதிபதி மீதும் நம்பிக்கை கொண்டுள்ளன. அதனால், இம்முறையும் போதுமான கால அவகாசத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வழங்கும்" என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்....
இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அல்ஹாஜ் அலவி மௌலானா நேற்று புதன்கிழமை மாலை கொழும்பில் காலமானார். சுதந்திரக் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினரான அலவி மௌலானா ஸ்ரீமாவோ தலைமையிலான அரசில் ஜனவசம நிறுவனத் தலைவராகச் செயற்பட்டிருந்தார். அதன் பின்னர் சுதந்திரக் கட்சி முஸ்லிம் பிரிவின் முக்கியஸ்தராகவும், கொழும்பு மாநகர...
முற்றாக அழிவடைந்த நிலையிலுள்ள கொஸ்கம சாலாவ இராணுவ முகாம் மீண்டும் புனரமைப்பு செய்யப்படவுள்ளது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (15) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும்...
வித்தியாவின் படுகொலை சம்பவம் தொடர்பில் உண்மைகளை அறிந்த பொதுமக்கள் சாட்சியாக வரவேண்டும் என ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம்.றியால் தெரிவித்துள்ளார். புங்குடுதீவு பாடசாலை மாணவியின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரனை நேற்றய தினம் ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துகொள்ளப்பட்ட போதே நீதிவான் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக நீதிவான் குறிப்பிட்டிருப்பதாவது, இத்தகைய பாரதுரமான...
இலங்கையில் மாகாண சபைகளில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக அமைச்சரவையில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம், குறைந்தபட்சம் 25...
Loading posts...
All posts loaded
No more posts
