இன்று உள்ள அரசியல் தலைவர்கள் இனவாதிகள் அல்ல!

இன்று உள்ள அரசியல் தலைவர்கள் இனவாதிகள் அல்ல, அதனால் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் வழிகாட்டலில், எதிர்க்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனின் காலத்திலேயே, வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் கிடைப்பதற்கு வழியமைக்க வேண்டும் என, மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதற்காக...

வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவதற்கு பல வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டு அடிப்படையில் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பாக குறித்த நிறுவனத்தின் தலைவர் லியனகே தலைமையில் முன்னாள் ஊழியர்கள், பொறியியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் உடனான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காங்கேசன்துறை தல்செவன விடுதியில் இடம்பெற்றது. சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவதற்கு 4...
Ad Widget

கிளிநொச்சி வைத்தியசாலை பரிசோதகர் திடீர் மரணம்!! வைத்தியசாலையின் கவனயீனம் காரணமா

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற பெண் பரிசோதகர், மூன்று நாள் காய்ச்சலை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மரணமடைந்ததால் அவரது உடல் யாழ் போதானா வைத்தியசாலையின் உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ராசா றமணி என்பவர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு,...

தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய மூன்று உபகுழுக்கள் ஆரம்பம்!

நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தமிழ் மக்கள் பேரவை தனது முக்கிய மூன்று உபகுழுக்களை ஆரம்பித்துவைத்து அதன் செயற்பாடுகள் பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டது. இச்செய்தியாளர் மாநாட்டில், கலை கலாசாரத்திற்கான உபகுழு சார்பான விளக்கத்தினை அதன் இணைப்பாளர்களாகிய ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள் (சின்மயா மிஷன்), அருட்தந்தை மரிய சேவியர் (திருமறைக்கலாமன்ற ஸ்தாபகர்) மற்றும் திரு. T...

சலாவ வெடிப்புச்சம்பவம் நாசவேலையாக இருக்கலாம்!

கொஸ்கம-சலாவ இராணுவ முகாமில் நேற்று மாலை இடம்பெற்ற வெடிப்புச்சம்பவத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாலக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்றிரவு சம்பவ இடத்திற்கு பயணம் செய்து நேரில் ஆய்வுசெய்த அமைச்சர் பின்னர் கருத்து வெளியிடுகையில், சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் கிடங்கு வெடிக்கத் தொடங்கியதால் அதன் அருகில் எவரும் செல்ல முடியாத...

மதுபானம் அருந்திய பாடசாலை மாணவர்கள் கைது

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சபாபதிபிள்ளை சந்தி பகுதியில், மதுபானம் அருந்திக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் ஐவரை சனிக்கிழமை (04) மாலை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எல்.துஸ்மந்த தெரிவித்தார். யாழ். நகரில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் கும்பலொன்று, பொலிஸாரை கண்டதும் தப்பியோட...

காதலை ஏற்க மறுத்த பெண்ணை கொலை செய்ய முற்பட்டவருக்கு விளக்கமறியல்

காதலிக்க மறுத்த பெண் ஒருவரை கொலை செய்யும் நோக்குடன் பெற்றோல், மிளகாய்தூள் மற்றும் கையுறையுடன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞனை, எதிர்வரும் 16ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் மாவட்ட பதில் நீதவான் என்.தம்பிமுத்து உத்தரவிட்டார். அச்சுவேலி - பத்தமேனி பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன், இடைக்காடு பகுதியைச் சேர்ந்த...

யாழ். மாவட்டத்தில் இதுவரை 33,472 குடும்பங்கள் மீள்குடியேற்றம்

யாழ். மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது வரையான காலப்பகுதியில் 33,472 குடும்பங்கள் மீள்குடியேற்றியுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'இந்தியாவில் இருந்து வருகை தந்த 955 குடும்பங்கள் உள்ளடங்கலாக 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் இவ்வாறு 33,472 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறியுள்ளன. இந்நிலையில், யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில், 10,770 குடும்பங்கள் இன்னும்...

அமரர் மு.சிவசிதம்பரத்தின் 14ஆவது நினைவு தினம் வடமராட்சியில் அனுஷ்டிப்பு!

நல்லூர், உடுப்பிட்டித் தொகுதிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உப சபாநாயகருமான அமரர் மு.சிவசிதம்பரத்தின் 14ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வடமராட்சி நெல்லியடியில் இடம்பெற்றது. நெல்லியடி பஸ் நிலையப் பகுதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஏம்.ஏ.சுமந்திரன் உட்பட பலர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி...

இராணுவ முகாம் தீ விபத்து : 8 பேர் உயிரிழப்பு :39 பேர் வைத்தியசாலையில்

கொஸ்கம - சலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 39 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சலாவ இராணுவ முகாமிலிருந்து ஒரு கிலோமீற்றருக்குள் வசிப்பவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு மீண்டும் திரும்ப வேண்டாம் என இராணுவப் பேச்சாளர் இன்று காலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது....

காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு பாதிப்பு

காலநிலை மாற்றத்தின் காரணமாக பூமத்திய ரேகைக்கருகில் அமைந்துள்ள இலங்கைக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுமென நாசா நிறுவனத்தின் விசேட விஞ்ஞானியான டாக்டர் சரத் குணபால தெரிவித்துள்ளார். யட்டயந்தோட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை; ஐ.நாவில் நிரூபிக்க முடியுமா?

ஸ்ரீலங்காவில் இறுதியுத்தத்தில் 40 ஆயிரம்பேர் கொல்லப்படவில்லை என்பதை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நல்லாட்சி அரசாங்கத்தினால் நிரூபிக்க முடியுமா என தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்பவற்றை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஐ.நாவில் தெரிக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் மாவை...

கோட்டாபய விரைவில் கைது ; இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிரடி?

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகள் குறித்து ஆராய்ந்து வருவதாக உயர்மட்டத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக இதுவரை கிடைத்திருக்கக்கூடிய முறைப்பாடுகளைத் தொகுத்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவிருப்பதாக சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் குற்றப் பத்திரிகையை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு...

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பது சந்தேகமே!!! மெக்ஸ்வெல் பரணகம

முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு தனது மனச்சாட்சியை வெளிப்படுத்தியுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம ஐ.பி.சி.தமிழ் செய்திகளுக்கு வழங்கிய சிறப்பு நோ்காணலில் அவர் மனம் திறந்துள்ளார். மெக்ஸ்வெல் பரணகம முன்னாள் நீதியரசர் ஆவார். அரசாங்கத்துக்கு...

ஒற்றுமையும் ஒற்றையாட்சியும் ஒன்றல்ல!

ஓற்றுமை என்பதும் ஒற்றையாட்சி என்பதும் வேறுபட்டவை, இதனை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ‘புதிய அரசியல் சாசனம் தயாரிப்பதற்காக மக்களின் கருத்துக்களை அறிவதற்கு நியமிக்கப்பட்ட குழு, அரசாங்கத்திடம் கையளித்துள்ள இறுதி அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘ஓற்றையாட்சி...

போர்க் குற்ற விசாரணை ஸ்தம்பிதம் குறித்து அழுத்தம்! ஐ.நா. அறிக்கையாளரிடம் நேரில் சுட்டிக்காட்டவுள்ளது சிவில் சமூகம்!!

"இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணையை தாமதப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த விடயத்தை இலங்கை வரும் ஐ.நா.வின் விசேட அறிக்கையாளரிடம் அழுத்தம் திருத்தமாக நேரில் தெரியப்படுத்தவுள்ளோம். அத்துடன் போர்க்குற்ற விசாரணையை உடன் ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசுக்கு ஐ.நா. அழுத்தம் வழங்க வேண்டும் என்பதையும் இதன்போது வலியுறுத்தவுள்ளோம்.'' - இவ்வாறு சிவில் சமூகத்தினர் தெரிவித்தனர். இலங்கைக்கு வருகைதரும் ஐ.நாவின்...

தமிழர் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம்!

பழைய ஆட்சியில் மக்களுக்கு நடந்த பல சம்பவங்கள் தற்போது இடம்பெறுவதில்லை, எனினும் அது எமது மக்களின் பிரச்சினைக்கு முடிவு அல்ல, எமது பிரச்சினைக்கு முடிவு வரவேண்டும் எமது மக்களுக்கு நிரந்தரமான, நியாமான தீர்வு வரவேண்டும், என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து...

வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சின் உலக சூழல்தின நிகழ்ச்சி வவுனியாவில்

வடமாகாண சுற்றுச்சூழல் அமைச்சின் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி இம்முறை வவுனியாவில் நடைபெற்றுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (03.06.2016) வவுனியா கலைமகள் மகாவித்தியாலயத்தில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் யூன் 5ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கையில், ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இவ்வருடத்தில் இருந்து மே 30...

தமிழினியின் கணவர் ஜெயக்குமாரின் உயிருக்கு அச்சுறுத்தல்!!

தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் கணவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளதாக ஆங்கில இணையம் செய்தி வெளியிட்டு உள்ளது. இந்த இணையத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஒரு தரப்பினர் தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழினியின் ஓர் போர்வாளின் நிழலில் நூல்...

சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் : அரசாங்கம் அனுமதி!! வட மாகாண சுகாதார அமைச்சர் தடை!!!

யாழ்.மாவட்டத்தில் பிரதேச சுகாரதார பணிமனையின் கீழ் உள்ள சுகாதார தொண்டர்கள் 820 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது. யாழ் மாவட்டத்தில் உள்ள சுகாதார தொண்டர்கள் தமது நிரந்தர நியமனம் தொடர்பில் நேற்று வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன் போதே வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இவ்வாறு தெரிவித்துள்ளார்....
Loading posts...

All posts loaded

No more posts