Ad Widget

தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய மூன்று உபகுழுக்கள் ஆரம்பம்!

நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தமிழ் மக்கள் பேரவை தனது முக்கிய மூன்று உபகுழுக்களை ஆரம்பித்துவைத்து அதன் செயற்பாடுகள் பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டது.

tpc

இச்செய்தியாளர் மாநாட்டில், கலை கலாசாரத்திற்கான உபகுழு சார்பான விளக்கத்தினை அதன் இணைப்பாளர்களாகிய ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள் (சின்மயா மிஷன்), அருட்தந்தை மரிய சேவியர் (திருமறைக்கலாமன்ற ஸ்தாபகர்) மற்றும் திரு. T வசந்தராஜா ஆகியோரும், சமூக, பொருளாதார வலுவூட்டலிற்கான உபகுழு சார்பான விளக்கத்தினை அதன் இணைப்பாளர்களாகிய பேராசிரியர் சிவநாதன் (யாழ். பல்கலைக்கழகம்), பேராசிரியர் அமிர்தலிங்கம் (கொழும்பு பல்கலைக்கழகம்) மற்றும் வைத்திய நிபுணர் கருணாகரன் (பதில் துணைவேந்தர், கிழக்கு பல்கலைக்கழகம்) ஆகியோரும், பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச விசாரணைக்கான உபகுழு சார்பான விளக்கத்தினை சட்டத்தரணி காண்டீபனும் அளித்தனர்.

சமூக, பொருளாதார வலுவூட்டலிற்கான உபகுழு

உபகுழு இணைப்பாளர் :-
பேராசிரியர் சிவநாதன் (யாழ். பல்கலைக்கழகம்)
பேராசிரியர் அமிர்தலிங்கம் (கொழும்பு பல்கலைக்கழகம்)
வைத்திய நிபுணர் கருணாகரன்

உபகுழு உறுப்பினர்கள்:-
தமிழர் தாயகமாகிய வடக்கு, கிழக்கின் பொருண்மிய துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் எமது பிரதேச அபிவிருத்தியில் பங்காற்றி அனுபவமுள்ள பல்வேறுபட்ட திணைக்கள உத்தியோகஸ்தர்கள், தொழில் அதிபர்கள், அரச சார்பற்ற நிறுவனத்தவர்கள் அடங்கிய வடக்கு கிழக்கு தழுவிய 20 அங்கத்தவர்களைக் கொண்ட உபகுழு.

நோக்கம்:-
தமிழர் தாயகமாகிய வடக்கு, கிழக்கில் ஒரு முறைப்படியான திட்டமிடலுடன் அபிவிருத்திகளை மேற்கொள்ள சகலவிதமான ஒத்துழைப்பையும் வழங்கல், பிரதேசத்திற்கும், தமிழ் மக்களுக்கும் நேரான/எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடிய அபிவிருத்தித்திட்டங்களை இனங்கண்டு அது பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் இனங்காணப்பட்ட சில பொருண்மிய திட்டங்களை செயற்படுத்தல்.

முக்கிய மிரதான செயற்திட்டங்கள்:-
1. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பொருண்மிய திட்டமிடல் குழுவாக இயங்குதல்.
2. வடக்கு கிழக்கிற்கான ஒரு பூரண பொருண்மிய வரைபை உருவாக்கி அதன் அடிப்படையில் அபிவிருத்திகளை மேற்கொள்ளத் தேவையான செயற்திட்டங்களை மேற்கொள்ளல்.
3. உடனடிச் செயற்திட்டங்களாக சில அடையாளங்காணப்பட்ட சிறிய, நடுத்தர முயற்சியாண்மை மேம்படுத்தல் செயற்திட்டங்களை செயற்படுத்தல். (உ+ம்: போரினால் அங்கவீனமானவர்கள், மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், வறுமை நிலையிலுள்ள குடும்பங்கள் போன்றவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தி வலுவாக்குவதற்கான செயற்திட்டங்கள்)

செயற்பாட்டு முறை:-
ஆரம்பத்தில் 20 அங்கத்தவர்களைக் கொண்ட இவ் உபகுழு, துறைசார்ந்த பிரிவுகளாக மேலும் நிபுணர்களை தாயகம், மற்றும் புலம்பெயர் பிரதேசங்களில் இருந்து உள்வாங்கி விரிவாக்கப்படும்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட உபகுழு, பிரதேச அபிவிருத்திக்கும், எம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முனைவோருக்கும், தேவைக்கேற்றவகையில் அந்தந்த பிரிவுகள் சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளை வழங்கும். மேலும், இப்பிரிவுகளின் முழுப்பங்களிப்புடன் வடக்கு கிழக்கிற்கான பொருண்மிய வரைபை உருவாக்கும்.

எம்முடன் இணைந்து செயற்படவிரும்பும் நிபுணர்கள், மற்றும் ஆர்வலர்கள் நேரடியாக எமது உபகுழுவுடன் +94 710145723 அல்லது +94 756993212 என்ற தொலைபேசி இலக்கங்களூடாகவோ அல்லது economy@tamilpeoplescouncil.org என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்புகொண்டு இணைந்து செயற்படலாம்.

மேலும் இச்செயற்திட்டங்களில் இணைந்து பங்களிக்கவிரும்பும் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் மேற்குறிப்பிட்ட தொடர்புகளினூடாக இணைந்து கொள்ளலாம்.

நன்றி

இணைப்பாளர்
சமூக, பொருளாதார வலுவூட்டலிற்கான உபகுழு
தமிழ் மக்கள் பேரவை

Related Posts