- Sunday
- August 16th, 2026
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ள 5 பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது மோட்டார் வாகனம்...
சேவையில் ஈடுபட்டுள்ள பஸ்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் சேவையில் ஈடுபட்டுள்ள அரசாங்க மற்றும் தனியார் பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர்சுத்திகரிக்கும் நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது
யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி விடுத்த வேண்டுகோளிற்கு அமைவாக இலங்கை கடற்படையினரினால் யாழ் போதனா வைத்திய சாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.இதனையே வடமாகாண கடற்படை தளபதிறியல் அட்மிரல் பியல் டி சில்வா நேற்று காலை உத்தியோகபூர்வமாக...
வடக்கில் மதுபாவனை 400 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.மேலும் 2015 ஆம் ஆண்டு தனி நபரின் மதுபான நுகர்வு 5.7 லீற்றர் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றம் நேற்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது வாய்மூல வினாவுக்கான நேரத்தின் போது ஜே.வி.பி எம்.பி. பிமல் ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே...
அமெரிக்க உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மயிக் பென்ஸ் மற்றும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும், இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட எதிர்கால பயணத்திற்கு ஒத்துழைப்பை வழங்கவும் அமெரிக்கா தயாராகவுள்ளதாக, அமெரிக்காவின்...
வடமாராட்சி கடற்பகுதியில் நேற்று முன்தினம் (புதன் கிழமை) இரவு ஐந்து படகுகளில் மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்களும் நேற்று (வியாழக்கிழமை) கரை திரும்பி உள்ளனர். நேற்று முன்தினம் புதன் கிழமை இரவு அல்வாய் பகுதியில் இருந்து மூன்று படகுகளில் ஆறு மீனவர்களும் , வல்வெட்டித்துறை பகுதியில் இருந்து ஒரு படகில் சென்ற இரு மீனவர்களும் ,...
யாழ்.மாவட்டத்தில் நாடா சூறாவளியின் தாக்கத்தினால் 57 குடும்பங்களை சேர்ந்த 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவசர நிலை உண்டாகுமானால் அதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் யாழ்.மாவட்ட செயலாளர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் சூறாவளி காரணமாக சாவகச்சேரியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேபோல் மருதங்கேணி மற்றும், மாதகல் பகுதிகளில் கடலுக்கு சென்றவர்கள் காணாமல் போயுள்ளதாகவும்...
நாட்டில் மீண்டுமொரு இரத்தகளரி உருவாக வேண்டும் என்று சிலர் எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தேசிய ஒருமைப்பாடு, தேசிய சகவாழ்வு மற்றும் அனர்த்த முகாமைத்துவத்திற்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூல விவாதத்தில் கலந்து சிறப்புரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், அரசியல் தீர்வை முன்வைப்பது தேசத்துரோக நடவடிக்கையல்ல...
கிளிநொச்சி – முகமாலை பகுதியிலுள்ள சிறிய இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள 700 ஏக்கர் காணி பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. 60 குடும்பங்களின் காணிகள் கையளிக்கும் நிகழ்வு இன்று காலை 10 .00 அளவில் இடம்பெறவுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னர் குறித்த பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகளே இவ்வாறு கையளிக்கப்பட்டவுள்ளன. குறித்த...
சிறீலங்காவுக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் றொபினா மார்க்ஸ், சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் உள்ள சிறீலங்கா எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இச்சந்திப்பு நேற்று நடைபெற்றது. சுமார் ஒரு மணித்தியாலம் வரை நீடித்த இந்தச் சந்திப்பில் அரசியலமைப்பு மாற்றம், சிறீலங்காவின் தற்போதைய அரசியல் முன்னேற்றங்கள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள், நிலையான அபிவிருத்திகளை...
நத்தார் விழாவில், போலிக் கொண்டாட்டங்களைத் தவிர்ப்போம் என்று கூறியுள்ள இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான நத்தார் மரம் தொடர்பிலும் தமது விமர்சனத்தை முன்வைத்துள்ளது. 'நத்தார் விழா' எனக் கொண்டாடப்படும், இயேசு கிறிஸ்துவின் பிறப்பானது, ஒரு நம்பிக்கையின் கொண்டாட்டமாகும். வெளிப்புற கிறிஸ்மஸ் அலங்காரங்கள், உச்ச அளவில் விளம்பரப்படுத்தப்படும் போலித்தனமான களியாட்டங்கள்...
இந்தியா, தமிழ்நாட்டிலிருந்து 1 படகில் மீன்பிடிக்கச்சென்ற ஐந்து மீனவர்கள், யாழ்ப்பண கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளனர். குறித்த மீனவர்களது படகில் எரிபொருள் நிறைவடைந்ததன் காரணத்தினாலேயே குறித்த மீனவர்கள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்மேற்கு வங்காளவிரிகுடாவில் உருவாகியுள்ள NADA சூறாவளியானது கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 12 கிலோமீற்றர் வேகத்தில் மேற்கு-வடமேற்குத் திசையில் நகர்ந்து தற்போது அதன் வலு குறைவடைந்து, தாழமுக்கமாக உருமாறியுள்ளது. இந்த NADA சூறாவளியானது இலங்கையின் காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்காக 200 கிலோமீற்றர் தூரத்திலும் சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்காக 290 கிலோமீற்றர் தூரத்திலும் புதுச்சேரியிலிருந்து தென்கிழக்காக 210 கிலோமீற்றர் தூரத்திலும்...
இறக்குமதி தீர்வை அதிகரிப்பின் காரணமாக, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் இரண்டு எரிதிரவங்களுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளனர்.இதன்படி எக்ட்ரா ப்ரீமியம் யூரோ 3 மற்றும் எக்ட்ரா மைல் ஆகிய இரண்டு வகையான டீசல்களின் விலைகளும் தலா இரண்டு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 'எக்ற்ட்ரா ப்ரீமியம் யூரோ 3' டீசலின் ஒரு லீற்றருக்கான விலை 123 ரூபாவாகவும், 'எக்ஸ்ட்ரா மைல்'...
வானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் எமது கிளிநொச்சி மாவட்டத்தினூடாக 83 தொடக்கம் 93 கிலோமீற்றர் வேகத்தில் கடும் சுழல்காற்று அடுத்துவரும் 24 மணிநேரங்களுக்குள் வீசக்கூடும். அதேவேளை 46 மில்லிமீற்றரில் இருந்து 57 மில்லிமீற்றர் வரையான மழைவீச்சியும் அடுத்துவரும் 24 மணிநேரத்தினுள் எதிர்பார்க்கப்படுகிறது. சடுதியான கனமழை காரணமாகவும் கடும் சுழல்காற்றுக் காரணமாகவும் நேரக்கூடிய போக்குவரத்துத் தடை, மின்சார மற்றும்...
வடமராட்சி பகுதியில் கடலுக்கு புதன்கிழமை (30) இரவு மீன்பிடிக்க 6 படகுகளில் சென்ற 10 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத்துறை உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன், வியாழக்கிழமை (01) தெரிவித்தார். பருத்தித்துறை அல்வாய் பகுதியில் இருந்து மூன்று படகுகளுடன் கடலுக்கு சென்ற ஆறு பேர் இதுவரை கரை திரும்பவில்லை என மயிலிட்டி கடற்றொழில் சங்க...
சுன்னாகம் பிரதேசத்தில் குடிநீரில் கழிவு எண்ணெய் கலப்பிற்கு காரணமாக நிறுவனம் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நோர்தன் பவர் நிறுவனத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மத்திய நிலையம் சார்பாக பேராசிரியர் ரவீந்திர காரியவசம் தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை நேற்றைய தினம்...
பருத்தித்துறை தண்ணீர்குளத்தடி பகுதியில் நேற்றுப் புதன்கிழமை (30) மதியம், வீடு ஒன்றை உடைத்து 3 பவுண் நகை, 3,000 ரூபாய் பணம் என்பன திருட்டுப் போயுள்ளதாக, பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் உள்ள அனைவரும் வெளியில் சென்ற நேரம் பார்த்து முன்பக்க கதவினை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள், அலுமாரியில் இருந்த நகை, பணம் என்பவற்றை...
யாழில் தற்போது நிலவும் காற்றுடன் கூடிய மழை காரணமாக அச்சுவேலி தொண்டமனாறு பிரதான வீதியில் பிரதான மின்கம்பங்கள் இரண்டு சரிந்து வீழந்துள்ளன. இதனால் யாழ்ப்பாணம் பருத்தித்துறை 751 மார்க்க வீதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் அனைத்து வாகனங்களும் மாற்றுவழியூடாக பயணிக்கின்றன. குளிர்காற்றுடன் கூடிய மினிசூறாவளி தொண்டமானாறு பகுதியினை தாக்கியுள்ளது. இதனால் இரண்டு மின்கம்பங்கள் வீதியின் குறுக்கே சரிந்து...
யாழ்ப்பாணத்தில் நிலவும் காற்றுடன் கூடிய மழை கால நிலை காரணமாக, வீதியோரத்தில் இருந்த மரம் முறிந்து விழுந்து, ஒருவர் உயிரிழந்துள்ளார். பூநகரி கட்டட திணைக்கள தொழிநுட்ப உத்தியோகத்தரான சச்சிதானந்தம் சயந்தன் (வயது 30) என்பவரே உயிரிழந்துள்ளார். சாவகச்சேரியை வதிவிடமாக கொண்ட இவர், வியாழக்கிழமை (01) காலை மோட்டார் சைக்கிளில் அலுவலகத்துக்கு பறப்பட்டுச் சென்றுள்ளார். இதன்போது சாவகச்சேரி...
Loading posts...
All posts loaded
No more posts
