- Sunday
- August 16th, 2026
நீதிமன்றில் ஆஜர்படுத்த அழைத்து சென்ற போது தப்பிச் சென்ற குடு பேபி என அழைக்கப்படும் கரிகாலன் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேடுதல் நடத்திய வேளையில் யாழ்.மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார். 180 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் குடு பேபி என அழைக்கப்படும் கரிகாலன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக...
திருகோணமாலையில் இருந்து 400 கிலோமீற்றர் தூரத்திலும், காங்கேசன்துறையில் இருந்து 200 கிலோமீற்றர் தூரத்திலும் வீசிக்கொண்டிருக்கும் நாடா புயல், தற்போது வடகிழக்கு பகுதியில் மையம் கொண்டுள்ளது. அதனால் வடபகுதி எங்கும் கடும் மழை பெய்துவருவதுடன் கடும் காற்றும் வீசுகின்றது. காங்கேசன்துறை கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் கடற்கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ பிரிவால் வடபகுதியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பிலிருந்து 11.50க்கு யாழ்ப்பாணத்தை நோக்கி புறப்பட்ட உத்தரதேவி கடுகதி புகையிரதம், அநுராதபுரம் தம்புத்தேகம என்னுமிடத்தில் வைத்து, தடம்புரண்டது.
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக்கும் முகமாக, எதிர்வரும் சனிக்கிழமையும் (03), ஆட்பதிவுத் திணைக்களம் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, காலை 08.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை, ஆட்பதிவுத் திணைக்களத்தைத் திறந்து வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்.குடாநாட்டில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை நீடித்துவரும் நிலையில் வரலாறு காணாத வகையில் குடாநாட்டின் வெப்பநிலை 19.8 பாகை செல்சியஸ் ஆக உள்ளதாக யாழ். மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் கூறியுள்ளார். குடாநாட்டின் காலநிலை நிலவரம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தென்மேற்கு வங்க கடலில் உருவான ´நடா´ சூறாவளி தற்சமயம்...
நாடா" புயல்காற்று வடக்கை அச்சுறுத்திக் கொண்டுள்ள நிலையில், இன்று காலை கிளிநொச்சியில் பலமாக வீசிய காற்றினால் காலை எட்டு முப்பது மணியளவில் கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் உள்ள தற்காலிக வகுப்பறை தொகுதி ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் நடந்தவேளை பாடசாலையில் மாணவர்கள் இருந்த போதிலும் எவருக்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. தரம் ஆறு...
தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஊற்றுப்புலம் ஒடுக்கு பாலத்தின் ஊடாக போக்குவரத்து துண்டிக்கபடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் ஊற்றுப்புலம் கிராமத்தில் அமைந்துள்ள, ஒடுக்கு பாலத்திற்கு பதிலாக நிரந்தர பாலம் அமைக்கும் பணிகள் தற்போது இவ்வருட நடுப்பகுதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேவேளை மக்களின் தடையற்ற போக்குவரத்திற்கு மாற்று...
பிரதான விளக்கை எரிய விட்டு பயணிக்கும் முக்கியஸ்தர்களின் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்துமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். வீதி பாதுகாப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தற்போது தீவிரவாதப் பிரச்சினை நாட்டில் இல்லை என்பதால், ஏழு அல்லது எட்டு வாகனங்கள் சூழ பயணிக்க...
ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலை அடுத்தே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் மாங்குளம் - துணுக்காய் வீதியில் அமைந்துள்ள மாவீரர் குடியிருப்பு மக்களுக்கு வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சால் நல்லின ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நேற்று புதன்கிழமை (30.11.2016) நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நல்லின யமுனாபாரி ஆடுகளை வழங்கி வைத்துள்ளார். வடமாகாண கால்நடை அபிவிருத்தி...
அடுத்து வரும் 12 மணித்தியாலங்கள் முதல் சூறாவளி வீச கூடிய சாத்திய கூறுகள் இருப்பதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகினர் அறிவித்து உள்ளனர். இது தொடர்பில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகினர் ஊடகங்களுக்கு அனுப்பி உள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டு இருப்பதாவது, திருகோணமலையிலிருந்து 40 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளது, இத்தாழமுக்கம் யாழ்...
சர்வதேச அரங்கில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றம் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை வலுவிழக்கச் செய்யும் என்று அரசாங்கம் கருதினால் அது முற்றிலும் தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “நாங்கள்...
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் பணியாற்றும் அனைத்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான விடுமுறைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள 7 போக்குவரத்து குற்றச்சாட்டுக்களுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனியார் பஸ் ஊழியர்கள் இன்று முதலாம் திகதி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர்களது...
கடந்த 16ஆம் திகதி, கல்லுண்டாய் வெளியில் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி, செவ்வாய்க்கிழமை (29) அடையாளம் காட்டியதையடுத்து சடலம், நேற்று புதன்கிழமை (30), யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய நிபுணர் உருத்திராபதி மயூரதனால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். தாமரைக்குளத்தடி...
தென்மேற்கு வங்காளவிரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது தற்போது இலங்கையின் கிழக்காக திருகோணமலையிலிருந்து 680 கிலோமீற்றர் தூரத்திலும் சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 1,050 கிலோமீற்றர் தூரத்திலும் புதுச்சேரியிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 1,020 கிலோமீற்றர் தூரத்திலும் மையங்கொண்டுள்ளது. வானிலை அவதான நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து வலுவான தாழமுக்கமாக உருமாறி, வடக்குமேற்குத் திசையில் நகர்ந்து பின்னர்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறந்த சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று (30) புதன்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண மற்றும் யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் கலந்துகொண்டதுடன், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பரிசில்களை வழங்கி கௌரவித்தனர்....
தொழில்நுட்பம் மற்றும் கல்விமானி பெற்ற நாடகமும் அரங்கியல் பட்டதாரி ஆசிரியர்கள் 269 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று கல்வி அமைச்சில் நடைபெற்றது. இவர்களில் 29 தமிழ் மொழி மூலமான ஆசிரியர்களும் 240 சிங்கள மொழி மூலமான ஆசிரியர்களும் அடங்குகின்றனர். இந்த ஆசிரியர்களில் மாகாண பாடசாலைகளுக்கு 137 பேரும் தேசிய பாடசாலைகளுக்கு 132 பேரும் நியமனம்...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நான்கு நோயாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தேடிப்பார்ப்பதற்கு சுகாதார அமைச்சினால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவினால் கடந்த 28ம் திகதி இருதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஆறு நோயாளர்களில் நான்கு நோயாளர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. அதன்படி இது தொடர்பில் தேடிப்பார்ப்பதற்காக...
நேற்றய தினம் பாரளுமன்றில் டக்ளஸ் அவர்கள் ஆற்றிய உரையின் முழு வடிவும் கௌரவ சபாநாயகர் அவர்களே! இன்றைய தினம் வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு எனது கருத்துக்களை இங்கு முன்வைக்கக் கிடைத்தமை தொடர்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அந்த வகையில்,...
வடமாகாண சபைக்கான கட்டு நிதியில் மேலும் ஒரு தொகுதி நிதியாக 500 மில்லியன் ரூபா மத்திய திறைசேரி விடுவித்துள்ளதாக வட மாகாணத் திறைசேரியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரிய வருவது , வட மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரைக்கும் 34 வீதமான நிதிகளே மாகாணத் திறைசேரிக்கு கிடைத்த நிலையில் நேற்றைய தினம் மேலும்...
Loading posts...
All posts loaded
No more posts
