ஆவா குழு உறுப்பினர்கள் 11 பேருக்கும் பிணை

யாழில் இயங்கும் ஆவா எனும் குழு தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 11 பேரையும் சரீரப் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். அண்மைக் காலங்களில் யாழில் இடம்பெற்ற சில வன்முறைச் சம்பவங்களுடன் ஆவா எனும் குழு தொடர்புபட்டுள்ளதாக, தகவல் வௌியானது. இதற்கமைய, பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அந்த குழுவுடன்...

ஊடகவியலாளர்களுக்கு நீதியை கோரும் டக்ளஸின் கருத்து வேடிக்கையாக இருக்கின்றது

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர், டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் தாக்குதலுக்கு உள்ளான தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் அந்த நேரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதிருந்துவிட்டு, ஊடகவியலாளர்களுக்கு நீதியை கோருவது வேடிக்கையான விடயமென தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த கருத்தை முன்வைத்துள்ளார். நாடாளுமன்ற...
Ad Widget

ஆவாக் குழுவெனக் கூறி தமிழ் இளைஞர்கள்மீது பயங்கரவாதத் தடைச்சட்டம், ஒருவரை பிணையில் விடுவித்தது நீதிமன்றம்!

ஆவாக் குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் யாழ்ப்பாணக் காவல்துறையினர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நான்கு இளைஞர்களைக் கைதுசெய்தனர். ஆவாக் குழுவுடன் தொடர்புகளைப் பேணினார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே குறித்த நான்குபேரும் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும், குறித்த நபரால் முகநூலில் பதிவேற்றப்பட்ட புகைப்படம் ஒன்றில் காணப்படும் மோட்டார் சைக்கிள் குறித்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர்...

சர்வமத குழுக்களின் ஏற்பாட்டால் காணாமல்போனவர்களின் விபரங்களைத் திரட்டும் நிகழ்வு யாழில்!

சர்வமதக் குழுக்களின் ஏற்பாட்டில் நாட்டில் கடந்த கால யுத்த நிலைமைகளின் போது காணாமற் போனவர்களின் விபரங்களை கேட்டு அறியும் நிகழ்வு நடைபெற்றது. குறித்த நிகழ்வானது யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம் ஆகிய மாவட்டங்களின் சர்வமதக் குழுக்களின் ஏற்பாட்டில் இலங்கை சமாதானப் பேரவையின் அனுசரணையில் யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் காலை 9.00 மணியளவில் ஓய்வு பெற்ற யாழ்ப்பாண உயர்...

தமிழ் பெண் எம்.பிக்கள் மௌனம் காத்தனர்

நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற, மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள் அமைச்சு மீதான விவாதத்தில், தமிழ் பெண் எம்.பி.க்கள் எவருமே உரையாற்றவில்லை. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களில் 13 பேர் மட்டுமே, பெண் உறுப்பினர்களாவர். அவர்களில் ஆறு உறுப்பினர்கள் மட்டுமே நேற்றைய விவாதத்தில் உரையாற்றினர். இந்த அமைச்சு மீதான குழுநிலை விவாதம், நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை காலை...

கட்டையுடன் நின்றிருந்த மதனராஜாவை அடையாளம் காட்டுவேன்

“கையில் பெரிய கட்டையுடன், மதனராஜா நின்றிருந்தார். தகாத வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்தார். ஆக்ரோஷமாக இருந்தார். அவருடன் நின்றிருந்தவர்களும், ஆக்ரோஷமாக இருந்தனர். என்னால் அவரை அடையாளம் காட்ட முடியும். அவர் ஈ.பி.ஆர்.எல்.எப் இல் இருந்து, பின்னர் ஈ.பி.டி.பி.இல் இணைந்திருந்தார். அதனால், அவரை எனக்கு நன்றாகத் தெரியும்” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், நீதிமன்றில் சாட்சியமளித்தார். கடந்த...

தாலிக்கொடி அறுத்தவரை துரத்தி பிடித்த பொதுமக்கள்

திநெல்வேலி பகுதியில் வயோதிப பெண்மணி ஒருவரின் தாலிக்கொடி அறுத்த இளைஞர் ஒருவரை வீதியில் சென்றவர்கள் துரத்திப்பிடித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , திருநெல்வேலி வாலையம்மன் கோவிலடி பகுதியில் நேற்று மாலை 4மணியளவில் நடந்து சென்றுகொண்டிருந்த வயோதிப்பெண்மணியின் தாலிக்கொடியினை மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் அறுத்து சென்றுள்ளனர். அதனைக் கண்ட வீதியில் சென்றவர்கள் இருவரையும்...

மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் எதனையும் செய்ய முடியாது

மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் எதனையும் செய்ய முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் ஏதேனும் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால் அது குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு இராணுவத்தைச் சாராது எனவும் அது சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு அமைச்சு மற்றும் காவல்துறை திணைக்களத்தைச் சாரும் என...

வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கு ஜனவரி முதல் ஓய்வூதிய திட்டம்

வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கு ஜனவரி முதல் ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். அத்துடன் பயிற்றப்பட்டவர்களை வெளிநாட்டு தொழிலுக்கும் அனுப்பும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பிக்கவிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது....

வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமையால் விபசாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

நாட்டில் 12000 முதல் 15000 வரையான விபசாரிகள் இருப்பதாக அரசு கூறினாலும் அரச சார்பற்ற அமைப்புகளின் கணிப்பின் பிரகாரம் 4 இலட்சம் விபசாரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வற்வரி விதிப்பு உட்பட்ட வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமையினால் நாட்டில் விபசாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடிய ஆபத்து தோன்றியிருப்பதாக ஐ.ம.சு.மு.எம்.பி சிறியாணி விஜேவிக்கிரம தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று 2017...

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மூவர் சமூகத்துடன் இணைப்பு

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருட புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவு செய்த மூவர் நேற்றயதினம் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். நேற்றய தினம் சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்களில் திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த இருவரும் சிங்கள இளைஞர் ஒருவரும் அடங்கியுள்ளனர். தமிழீழ விடுதலை புலிகளுடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பில் சரணடைந்தும் கைதுசெய்யப்பட்டும், இருந்த நிலையில் பூந்தோட்டம் புனர்வாழ்வு...

ஜெனீவாக் கூட்டத்தொடரை இலக்குவைத்தே மாவீரர் தினம் அனுட்டிக்க அரசு அனுமதி

2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரை இலக்குவைத்தே தமிழர் தாயகப் பிரதேசமெங்கும் மாவீரர் தினத்தை அனுட்டிக்க சிறீலங்கா அரசாங்கம் அனுமதியளித்தாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், சமஷ்டி முறையிலான அரசியல் தீர்விலிருந்து தமிழ் மக்களை திசைதிருப்பும் நோக்கிலும் சிறீலங்கா அரசாங்கம் மாவீரர் தினத்தை அனுட்டிக்க...

நாம் எதிர்பார்க்காத அதிர்ச்சி தரக்கூடிய அரசியல் மாற்றம் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது!

நாங்கள் எதிர்பார்க்காத அதிர்ச்சி தரக்கூடிய அரசியல் மாற்றமொன்று இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் விஷேட கூட்டம் எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், நாட்டின்...

வைத்தியர்கள் இன்று வேலைநிறுத்தம்

இன்று புதன்கிழமை (30) காலை முதல் நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. 2017ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக, அதன் ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், நேற்று காலையில் நடத்திய ஊடகவியலாளர்...

அரச பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

அரச மற்றும் அரச அனுமதிப் ​பெற்றப் பாடசாலைகள், மூன்றாம் தவணை விடுமுறைக்காக டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டின் முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக இந்தப் பாடசாலைகள் 2017 ஜனவரி 2ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.

‘எனது மணிக்கட்டு முறிந்தது’

“எனக்கு அடித்தார்கள். இரண்டாவது முறை அடித்த போது கையால் தடுத்தேன். மூன்றாவது முறை தாக்கப்பட்ட போது எனது இடது கையினால் தடுத்தேன். அதனால் எனது மணிக்கட்டு முறிந்தது. அவ்வாறு தடுத்தபடியால் தான் நான் உயிர்பெற்றிருக்கிறேன் என நினைக்கிறேன். நெப்போலியனின் அடியாட்களினால் நாம் தாக்கப்பட்டோம். அப்போது நெப்போலியனின் மாவை சேனாதிராஜாவை தாக்குங்கள் என்ற குரல் கேட்டது. என்...

கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு

கல்வியியல் கல்லூரிகளில் கற்கும் மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் அடுத்த வருடம் முதல் அதிகரிக்கப்படவிருக்கின்றன. கல்வியியல் கல்லூரிகளுக்கான பிரதம ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்டிபாக அவர் மேலும் தெரிவிக்கையில, மூவாயிரத்து 500 ரூபா கொடுப்பனவு நான்காயிரம் ரூபா வரையும், நான்காயிரம் ரூபா கொடுப்பனவு ஐயாயிரம் ரூபா வரையும் அதிகரிக்கப்படவிருப்பமதாக தெரிவித்தார். இறுதி ஆண்டு மாணவர்களுக்கான கொடுப்பனவுகள்...

உண்மையை கூறும் குழுமத்தின் அமர்வு யாழில்

இலங்கை சமாதான பேரவையின் அனுசரணையுடன் யுத்தத்தினால் நடளாவிய ரீதியில் பாதிப்புக்குள்ளானவர்கள் தொடர்பான கருத்துக்களை கேட்கும் உண்மையை கூறும் அமர்வொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த அமர்வின், யாழ், மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கான அமர்வு நேற்று யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றது. ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற...

கருணா விளக்கமறியலில்

கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மரநடுகை மாதத்தை முன்னிட்டு அன்பே சிவம் அமைப்பால் மரக்கன்றுகள் விநியோகம்

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு அன்பே சிவம் அமைப்பு மரக்கன்றுகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு கட்டமாக, செவ்வாய்க்கிழமை (29.11.2016) இளவாலை கன்னியர்மட மாகாவித்தியாலயத்தில் தென்னந் தோட்டம் ஒன்றை அமைப்பதற்காக 100 தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அன்பே சிவம் அமைப்பு சுவிற்சர்லாந்தில் சூரிச் சிவன் ஆலயத்தின் நிதியூட்டலில் இயங்கிவரும் ஒரு சமூகத் தொண்டு நிறுவனம் ஆகும்....
Loading posts...

All posts loaded

No more posts