Ad Widget

மரநடுகை மாதத்தை முன்னிட்டு அன்பே சிவம் அமைப்பால் மரக்கன்றுகள் விநியோகம்

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு அன்பே சிவம் அமைப்பு மரக்கன்றுகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு கட்டமாக, செவ்வாய்க்கிழமை (29.11.2016) இளவாலை கன்னியர்மட மாகாவித்தியாலயத்தில் தென்னந் தோட்டம் ஒன்றை அமைப்பதற்காக 100 தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அன்பே சிவம் அமைப்பு சுவிற்சர்லாந்தில் சூரிச் சிவன் ஆலயத்தின் நிதியூட்டலில் இயங்கிவரும் ஒரு சமூகத் தொண்டு நிறுவனம் ஆகும். இவ்வமைப்பு இலங்கையில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்துவருகின்றது. அத்தோடு, ஆண்டுதோறும் வடமாகாண மரநடுகை மாதக் காலப் பகுதியில் மரநடுகையிலும் ஈடுபட்டு வருகின்றது.

இளவாலை திருக்குடும்பக் கன்னியர்மட மகாவித்தியாலயம் அண்மையில் கொள்வனவு செய்துள்ள தனது காணியில் தென்னந் தோட்டம் அமைப்பதற்குத் தேவையான தென்னங்கன்றுகளை வழங்கிவைக்குமாறு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தது. அதன் அடிப்படையிலேயே அன்பே சிவம் அமைப்பு இப்பாடசாலைக்கு நூறு நல்லின தென்னங்கன்றுகளை வழங்கி வைத்துள்ளது.

தென்னங்கன்றுகளை வழங்கி வைக்கும் இந்நிகழ்ச்சியில் வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் அன்பே சிவம் நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் அ.அருளானந்தசோதி ஆகியோர் கலந்து கொண்டு தென்னங்கன்றுகளை வழங்கி வைத்துள்ளார்கள்.

01

02

09

04

08

Related Posts