நாடா” புயல்காற்று வடக்கை அச்சுறுத்திக் கொண்டுள்ள நிலையில், இன்று காலை கிளிநொச்சியில் பலமாக வீசிய காற்றினால் காலை எட்டு முப்பது மணியளவில் கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் உள்ள தற்காலிக வகுப்பறை தொகுதி ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவம் நடந்தவேளை பாடசாலையில் மாணவர்கள் இருந்த போதிலும் எவருக்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
தரம் ஆறு தொடக்கம் உயர்தரம் கலை, வர்த்தகம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளைக் கொண்டு இயங்கி வருகின்ற இப்பாடசாலையில், கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்ப்பட்ட பிரதேச மாணவர்கள் அதிகமாகக் கல்விகற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.