தென்மேற்கு வங்காளவிரிகுடாவில் உருவாகியுள்ள NADA சூறாவளியானது கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 12 கிலோமீற்றர் வேகத்தில் மேற்கு-வடமேற்குத் திசையில் நகர்ந்து தற்போது அதன் வலு குறைவடைந்து, தாழமுக்கமாக உருமாறியுள்ளது.
இந்த NADA சூறாவளியானது இலங்கையின் காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்காக 200 கிலோமீற்றர் தூரத்திலும் சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்காக 290 கிலோமீற்றர் தூரத்திலும் புதுச்சேரியிலிருந்து தென்கிழக்காக 210 கிலோமீற்றர் தூரத்திலும் மையங்கொண்டிருந்தது.
இது மேற்கு-வடமேற்குத் திசையில் மேலும் நகர்ந்து அடுத்த 24 மணித்தியாலத்தில் படிப்படியாக அதன் வலு குறைவடைந்து வடதமிழ்நாட்டின் கரையோரப் பிரதேசமான வேதாரணியத்திற்கும் புதுச்சேரி மற்றும் தென் கூடலுருக்குமிடையில் ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி இன்று வட மாகாணம், வடக்கு கடற்பிராந்தியம், மற்றும் மன்னார் களப்பு ஆகிய பிரதேசங்களில் கடும் காற்று நிலை ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மழை பெய்யும் எனவும் நாட்டின் சில பாகங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை காலநிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.