Ad Widget

சம்பந்தனுடன் தென்னாபிரிக்கத் தூதுவர் சந்திப்பு!

சிறீலங்காவுக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் றொபினா மார்க்ஸ், சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

south-africa-amb-tna

நாடாளுமன்றத்தில் உள்ள சிறீலங்கா எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இச்சந்திப்பு நேற்று நடைபெற்றது.

சுமார் ஒரு மணித்தியாலம் வரை நீடித்த இந்தச் சந்திப்பில் அரசியலமைப்பு மாற்றம், சிறீலங்காவின் தற்போதைய அரசியல் முன்னேற்றங்கள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள், நிலையான அபிவிருத்திகளை எட்டுவதற்கான முயற்சிகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இப்பேச்சுவார்த்தையின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கலந்துகொண்டார்.

Related Posts