ஹெரோயினுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் கைலாசப்பிள்ளையர் கோயில் பகுதியில் வெள்ளிக்கிழமை (02) இரவு ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். பொம்மைவெளி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வைத்திருந்த 3 கிராம் 146 மில்லிகிராம் அளவுடைய ஹெரோயினை கைப்பற்றியுள்ள பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை...

கடலுக்குச் சென்ற மீனவர் சடலமாக கரையொதுங்கினார்!

கடற்தொழிலுக்கு சென்ற மீனவரின் சடலம் குருநகர் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருநகர் இறால் வளர்ப்பு திட்டப் பகுதியைச் சேர்ந்த ஆர்.ஜெகன் (வயது 31) என்ற நபரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் குருநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற வேளை, ஏற்பட்ட சுறாவளியின் போது சுழியில் சிக்கி இவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த...
Ad Widget

வடக்கில் வர்த்தகப் பொருளாதாரம் வீழ்ச்சிகாண ஆரம்பித்துவிட்டது

2017ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில், 02.12.2016 அன்று கைத்தொழில் மற்றும் வாணிபத் துறை அமைச்சு, அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு, ஆரம்பக் கைத்தொழில் அமைச்சு போன்ற அமைச்சுக்கள் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்கள் சார்பாக கருத்துக்களை முன்வைத்து உரையாற்றிய உரையின் முழுவடிவம்...

25000 ரூபா அபராதத் தொகையில் மாற்றம்

சாலை விதிகளை மீறுவோருக்கு எதிரான 25000 ரூபாய் அபராதத் தொகையில் இரு திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று காலை தனியார் பஸ் சங்கங்கள் சில ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அதற்கமைய இடது பக்கத்தால் முந்திச் செல்வது மற்றும் வேகம்...

பொலிஸ்மாஅதிபருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர் சாகல ரத்நாயக்கவே!

பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவே என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று கூட்டு எதிர்க்கட்சி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜயசூரியவும்,...

இன்று முதல் வெள்ளை கடவை

பாதசாரி கடவைகளுக்கு இன்று முதல் வெள்ளை நிற வர்ணம் பயன்படுத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை கூறியுள்ளது. குறித்த தகவலை சபையின் தலைவர் நிஹால் சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் ஒரு வருட காலத்தினுள் இந்த வர்ணப் பூச்சு செயற்பாடுகள் நிறைவுசெய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நடவடிக்ககை சர்வதேச தரநிர்ணயங்களுக்கு அமைய வீதிகளை அபிவிருத்தி...

யாழ் பல்கலை மாணவர்கள் கொலை வழக்கில் ஆயுதம் எடுக்கப்பட்டது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க நீதிவான் உத்தரவு

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் கடந்த ஒக்டோபர் மாதம் 20ம் திகதி பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்து இருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சந்தேகத்தின் போரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். அந்நிலையில் குறித்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான்...

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியுடன் கலந்துரையாட வருமாறு மைத்திரிக்கு அழைப்பு

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பொன்றுக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அமெரிக்காவின் உப ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் மைக் பென்ஸ் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் எதிர்கால அபிவிருத்திகளுக்கு அமெரிக்காவின் புதிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் இந்த அழைப்பில் அவர் மேலும் கூறியுள்ளார்.

சர்வதேச மாற்றுவலுவுள்ளோர் தினம்: ஜெய்ப்பூர் நிறுவனத்தில் இரத்த தானம்

சர்வதேச மாற்றுவலுவுள்ளோர் தினத்தை முன்னிட்டு, யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரத்த தான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாழ் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தினால் குறித்த இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ஜெய்ப்பூர் நிறுவன பயனாளிகள், பணியாளர்கள், பொதுமக்கள்...

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு சாத்தியமற்றது ; சுமந்திரன்

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனத் தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், எனினும் உடனடியாக இரு மாகாணங்களையும் இணைப்பது நடைமுறைச் சாத்திமற்றது என குறிப்பிட்டுள்ளார். 

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...

சுன்னாகத்தில் காற்றாலை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

சுன்னாகத்தில் இரண்டு காற்றாலை மின் திட்டங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. தலா 10 வாற்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் குறித்த காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளன. சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் இந்த திட்டங்களை சமர்ப்பித்திருந்தார். இதற்கு அமைச்சரவையால் அனுமதியளிக்கப்பட்டதையடுத்து சுன்னாகத்தில் இரண்டு காற்றாலை மின் திட்டங்களை அமைப்பதற்கான...

யாழ் பல்கலை மோதல் வழக்கை வாபஸ் பெறும் மாணவர்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை மீளப் பெறவுள்ளதாக தமிழ் சிங்கள மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்கள் இரு தரப்பினரையும் முறைப்பாடுகளை வாபஸ் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி...

தேவைக்கேற்ற போக்குவரத்துச் சேவைகள் : வடக்கில் வழமையான சேவைகள்

பயணிகளின் தேவையை பூர்த்தி செய்தியுமளவுக்கு ரயில் சேவைகள் நடத்தப்படுவதாக ரயில் கட்டுப்பாட்டு அதிகாரி விஜயசமரசிங்க தெரிவித்தார். இதே வேளை பயணிகளின் நலன்கருதி கூடுதலான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்தார். பயணிகளின் நலன்கருதி நேற்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான நான்காயிரத்து 100 பஸ்கள் குறுந்தூர மற்றும் நெடுந்தூர...

பணிப் பகிஸ்கரிப்பை கைவிட முடிவு

தனியார் பஸ் ஊழியர்கள் தாம் முன்னெடுத்து வந்த பணிப் பகிஸ்கரிப்பை கைவிடத் தீர்மானித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பிரச்சினை குறித்து கலந்துரையாட ஜனாதிபதி இணங்கியுள்ளதையடுத்தே அவர்கள் இந்தத் முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வடக்கு எதிர்கட்சித் தலைவர் யார் என விரைவில் தெரியவரும்?

வட மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் யார் என்ற விடயம் எதிர்வரும் 06.12.2016 அன்று மாகாண சபையின் அமர்வின் போது, தெரியவரும் என, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, நேற்றைதினம் யாழ் மாகாண சபையின் கட்டிடத் தொகுதியில் தற்போதை எதிர்கட்சித் தலைவர் சி.தவராஜா மற்றும் அதே கட்சியினை...

கேப்பாப்புலவில் இராணுவம் வசமிருந்த ஒரு தொகுதி காணி மீள்குடியேற்றத்திற்கு விடுவிப்பு

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிரதேசத்தில் ஓருபகுதியில் மக்கள் மீள்குடியேறுவதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் மாலை இராணுவ முகாமிற்கு மக்கள் பிரதிநிதிகளை அழைத்த இராணுவத்தினர், கேப்பாப்புலவின் பாடசாலைக்கு எதிர்ப்பக்கமாக உள்ள பகுதிகளில் மக்கள் மீள்குடியேற முடியும் என இராணுவத்தினர் தெரிவித்ததாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர். 2012 ஆம் ஆண்டில் நலன்புரி முகாம்களிலிருந்து அழைத்து வரப்பட்ட...

இன அழிப்புக்கு ஈபிடிபி பொறுப்புக்கூற வேண்டும்; கஜேந்திரகுமார் வலியுறுத்தல்

யுத்தத்தின் போது இடம்பெற்ற இன அழிப்புக்கு ஈபிடிபியும் அதன் தலைமையும் பொறுப்புக்கூற வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அண்மைக் காலமாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துவரும் கருத்து வேடிக்கையான விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற...

சுமந்திரனின் கருத்து தமிழ் மக்களின் ஆணையை மீறுகிறது

தமிழ் மக்களின் உரிமையான இறைமையை கோரவில்லை என சுமந்திரனின் கருத்து தமிழ் மக்களின் ஆணையை மீறும் செயல் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய அரசியல் 1951ஆம்...

முகமாலை காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு!

கிளிநொச்சி - பச்சிளைபள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட இந்திராபுரம் மற்றும் முகமாலை பிரதேசங்களில் கண்ணிவெடி அகழ்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அக் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. கடந்த 2000ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னர் குறித்த பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகளே இன்றைய தினம் அரசாங்க அதிபர் சுந்தரம்...

ஜனாதிபதியின் அனுமதி கிடைத்தால் ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தை விடுவிக்க தயார் : வன்னி இராணுவ தளபதி

ஜனாதிபதி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் அறிவித்தல் விடுத்தால் வவுனியா ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தை விடுவிக்கத் தயாரென வன்னி இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க தெரிவித்துள்ளார். வன்னி இராணுவ கட்டளை தளபதியுடன் வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கடந்த புதன்கிழமை சந்திப்பொன்றை...
Loading posts...

All posts loaded

No more posts