Ad Widget

கேப்பாப்புலவில் இராணுவம் வசமிருந்த ஒரு தொகுதி காணி மீள்குடியேற்றத்திற்கு விடுவிப்பு

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிரதேசத்தில் ஓருபகுதியில் மக்கள் மீள்குடியேறுவதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

keppapilavu-koppelavu-mullai

நேற்றையதினம் மாலை இராணுவ முகாமிற்கு மக்கள் பிரதிநிதிகளை அழைத்த இராணுவத்தினர், கேப்பாப்புலவின் பாடசாலைக்கு எதிர்ப்பக்கமாக உள்ள பகுதிகளில் மக்கள் மீள்குடியேற முடியும் என இராணுவத்தினர் தெரிவித்ததாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2012 ஆம் ஆண்டில் நலன்புரி முகாம்களிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்கள் கேப்பாப்புலவின் சூரிபுரம் பகுதியில் மாதிரிக் கிராமம் ஒன்றினை உருவாக்கி மக்களை அதில் தங்கவைத்திருந்தனர்.

கடந்த காலங்களில் தமது சொந்த இடங்களில் குடியேற்றுமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துடன் நீதிமன்றத்தையும் நாடியிருந்தனர்.

இந்த நிலையில் மக்கள் மீள்குடியேறுவதற்கு தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை மக்கள் மீள்குடியேறுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts