இன்று முதல் வெள்ளை கடவை

பாதசாரி கடவைகளுக்கு இன்று முதல் வெள்ளை நிற வர்ணம் பயன்படுத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை கூறியுள்ளது.

குறித்த தகவலை சபையின் தலைவர் நிஹால் சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஒரு வருட காலத்தினுள் இந்த வர்ணப் பூச்சு செயற்பாடுகள் நிறைவுசெய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்ககை சர்வதேச தரநிர்ணயங்களுக்கு அமைய வீதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாகவும் நிஹால் சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts