13ஆவது திருத்தத்தை சரியாக அமுல்படுத்தினால் அரசியல் தீர்வு கிடைக்கும்: சுவாமிநாதன்

13ஆவது திருத்தச் சட்டத்தை முறையாக அமுல்படுத்தினால் தமிழ் மக்களின் முக்கிய அரசியல் கருத்துக்களை அது விமர்சனம் செய்யுமென குறிப்பிட்ட அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அதனை செய்யத் தவறியுள்ளோம் என்றும் குறித்த திருத்தத்தை சரியாக அமுல்படுத்தினால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை கொடுக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...

ஒன்றுபட்ட நாட்டுக்குள் தீர்வொன்றைக்காண அனைவரும் முன்வரவேண்டும் ; சம்பந்தன்

13 ஆவது திருத்திலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டதனால் பிரச்சினைக்கு ஒருமித்த நாட்டுக்குள் தீர்வொன்றைக்காண அனைவரும் முன்வரவேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் கொழும்பு மாநாகர மேயர் க.கணேசலிங்கத்தின் 10 ஆவது வருட நினைவு தினைத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்து மாமன்றம் மற்றும் இந்து வித்யா விருத்திசங்கத்தின் ஏற்பாட்டில் பொழும்பு...
Ad Widget

‘இலங்கையில் தமிழர்-ஒரு முழுமையான வரலாறு’ நூலுக்கு இலங்கையில் தடை

கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய ‘இலங்கையில் தமிழர் – ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 – கி.பி 2000)’ என்னும் ஆய்வுநூல் நூலுக்கு இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது என வேலணையூர் சுரேஷின் கவிதைநூல் வெளியீட்டு விழாவில் கலந்து உரையாற்றியாற்றிய வடமாகாணக் கல்விப் பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை விவகார அமைச்சர் குருகுலராஜா தெரிவித்தார். வெளிநாட்டிலிருந்து வடமாகாண கல்வி...

புதிய சட்டதிட்டங்களால் வாகன விபத்துக்கள் குறைவு!

அரசாங்கம் அறிமுகப்படுத்திய புதிய சட்டதிட்டங்கள் காரணமாக தற்போது வாகன விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதை காணமுடிவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து பொலிஸாரின் புள்ளிவிபரங்களுக்கு அமைய கடந்த ஒரு வாரத்தில் வாகன விபத்துக்கள் 10வீதமாக குறைந்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. தினமும் 100 முதல் 125 வாகன விபத்துக்கள் தொடர்பான முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்து வந்துள்ளன....

அரசகரும மொழியாக தமிழையும் இணைக்க மஹிந்த கடும் எதிர்ப்பு

தமிழ் மற்றும் சிங்கள மொழி ஆகிய இரண்டையும் அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ மொழியாக மாற்றுவது தொடர்பில் அரசியல் நிர்ணய சபை யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. குறித்த யோசனைக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிக்கை ஒன்றை நேற்றய தினம் வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், வட கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தமையினால் கட ந்த...

குழந்தைக்குத் தான் தந்தையில்லையென பெண்ணை ஏமாற்றிய இளைஞனுக்கு சிறை

சட்டரீதியாகத் திருமணம் செய்வதாகக் கூறி நம்பிக்கை மோசடி செய்து குழந்தை ஒன்று பிறப்பதற்குக் காரணமான இளைஞனுக்கு, 5 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்சம் ரூபாய் பணத்தினை நட்டஈடாக வழங்குமாறு உத்தரவிட்டார். சந்தேகநபரின் மரபணு, குழந்தையின் மரபணுவுடன் ஒத்துபோனநிலையில்;...

மற்றுமொரு மீனவரின் சடலம் மீட்பு

'யாழ்ப்பாணம், குருநகர் கடற்பகுதியில் இருந்து கடந்த 30ஆம் திகதி, பாலைதீவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவா இருவர், கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், பாலைதீவு கடலில் இருந்து சடலமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளனர்' என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். மகேந்திரபுரம் தூண்டி பகுதியினை சேர்ந்த பிறான்சிஸ் மக்காரியோஸ் (வயது 39), கஸ்தூரி பத்மசிறிதர்...

வாள் வீசிய ஐவருக்கு விளக்கமறியல்

கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் வாளுடன் வெள்ளிக்கிழமை (02) கைதான சந்தேகநபர்கள் ஐவரையும், எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டதாக, கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.மஞ்சுல கஹந்தவெல தெரிவித்தார். குறித்த நபர்களும் சுன்னாகம், மானிப்பாய், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரதேசங்களில் இடம்பெற்ற பாரதூரமான...

அடைக்கலநாதனின் தந்தை காலமானார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், செல்வம் அடைக்கலநாதனின் தந்தை அடைக்கலம் அமிர்தநாதன் (சித்த வைத்தியர்) , யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (4) ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானார். செல்வம் அடைக்கலநாதனின் தந்தையான அடைக்கலம் அமிர்தநாதன் (வயது-83), திடீர் சுகவீனம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (4) அதிகாலை, மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

முக்கிய பிரமுகர்களுக்கும் சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியர்களுக்குமிடையில் இரகசிய தொடர்பு

சிறையில் அடைக்கப்படும் முக்கிய பிரமுகர்களுடன் சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியர்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்தும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகசுகாதார போஷாக்கு சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்படும் முக்கிய பிரமுகர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க மருந்து கூட்டுத்தாபனத்தின்...

காயமடைந்த இராணுவ அதிகாரிக்கு அனுராதபுரத்திலு சிகிச்சை

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ் வண்டி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த இராணுவ அதிகாரி அனுராதபுரம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தனியார் பஸ் உரிமையாளர்களின் சேவை பகீஷ்கரிப்பின் போதே இந்த தாக்குதல் சம்பவம் இடமபெற்றுள்ளது. இதே வேளை தனியார் பஸ் உரிமையாளர்களின் சேவை பணிப்பகிஸ்கரிப்பு நடைபெற்ற தினத்தன்று இலங்கை...

அரசியலில் நாங்கள் அங்கவீனர்களாக உள்ளோம் : பொ.ஐங்கரநேசன்

விடுதலைப்புலிகளது காலத்தில் தமிழ்மக்களுக்கு வலுவானதொரு அரசியல் தலைமைத்துவம் இருந்தது. இன்று, அத்தகைய பலம் வாய்ந்த, தமிழ்மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தலைமை இல்லாத நிலையில் அரசியல் ரீதியாக நாங்கள் அங்கவீனர்களாக உள்ளோம் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கருவி அமைப்பால் கடந்த சனிக்கிழமை (03.12.2016) சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் சரஸ்வதி...

வலிவடக்கில் இராணுவ முகாமுக்காக 70ஏக்கர் நிலம் அபகரிப்பு!

வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மக்களுடன் இராணுவத்தினரும் இருப்பர் என அறிவித்திருந்த நிலையில் ஏற்கனவே இராணுவ முகாம் இருந்த பகுதியைவிட மேலதிகமாக 70ஏக்கர் நிலத்தினை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் வலிகாமம் வடக்கில் 454 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டன. விடுவிக்கப்படும் பிரதேசத்தின் நடுவில் இராணுவ முகாம் இருக்கும் என...

நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்தால் 25000 அபராதம்!

நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருக்கும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 25,000 ரூபாய் வரை அதிகரிக்க அவதானம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சம்பந்தன் தலைமையிலான குழு எந்த அடிப்படையில் செயற்பட போகின்றது?

இறைமை மற்றும் வடகிழக்கு இணைப்பு என்பன சாத்தியமில்லை எனின் சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்ற குழு அரசியல் சாசனத்தில் எந்த அடிப்படையில் செயற்பட போகின்றதென மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென, கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், வடகிழக்கு இணைப்பு...

மட்டில் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்த தேரரால் குழப்பம்

மட்டக்களப்பு நகரில் மங்களராம விகாராதிபதி மற்றும் பொதுபலசேனா ஆதரவாளர்கள் மேற்கொள்ளவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளதை கண்டித்து மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடாத்த மங்களராம விகாராதிபதி முயன்றதன் காரணமாக அப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. ​நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பில் மங்களராம விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கல ரத்ன தேரருக்கு ஆதரவளிக்கும் வகையில் மட்டக்களப்பு நகரில் பொதுபலசேனாவினால்...

கிளிநொச்சியில் ஒருவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை

கிளிநொச்சி - பூநகரி பிரதேசத்தில் ஒருவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தையா சபாரத்தினம் (வயது 62) என்ற விவசாயியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டு, குழியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த...

வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய உயர்தர மாணவன் உள்ளிட்ட ஐவர் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 5 இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 வாள்கள், வாள்வெட்டுக்கு தயாராகும் புகைப்படங்கள், வீடியோக்கள் அடங்கிய கையடக்க தொலைபேசி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் முயற்சியில்...

மகிந்த அணிமீது கண்ணீர் புகைத் தாக்குதல்!

சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் இன்று காலை நாடாளுமன்றத்திற்கருகில் உள்ளூராட்சித் தேர்தலை விரைவாக நடாத்துமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொல்டுவ சந்தியிலிருந்து நாடாளுமன்றத்திற்கான வீதி மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் நாடாளுமன்றத்திற்கு அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்னிலையில் நிலைமையை...

நேற்றைய ஆர்ப்பாட்டத்தால் அரசுக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

தனியார் பஸ் ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை விதிகளை மீறுவோறுக்கு எதிரான அபராதத் தொகையை அதிகரித்தமையை கண்டித்து நேற்றையதினம் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுத்தனர். மறுபுறம் சேவையில் ஈடுபட்டிருந்த அரச பேருந்துகளினால் பெறப்படும் வருமானம் நேற்றையதினம் அதிகரித்துள்ளதாகவும், இந்த அதிகரிப்பு நூற்றுக்கு 66 வீதம்...
Loading posts...

All posts loaded

No more posts