அரசாங்கம் அறிமுகப்படுத்திய புதிய சட்டதிட்டங்கள் காரணமாக தற்போது வாகன விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதை காணமுடிவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து பொலிஸாரின் புள்ளிவிபரங்களுக்கு அமைய கடந்த ஒரு வாரத்தில் வாகன விபத்துக்கள் 10வீதமாக குறைந்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
தினமும் 100 முதல் 125 வாகன விபத்துக்கள் தொடர்பான முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்து வந்துள்ளன. தற்போது அது 90 முதல் 100 வரை குறைந்துள்ளது என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு வாகன விபத்துக்கள் காரணமாக தினமும் 7 முதல் 8 பேர் வரை உயிரிழந்தனர். தற்போது அது 5 முதல் 6 ஆக குறைந்துள்ளதை புள்ளி விபரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக நிதியமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.