Ad Widget

அடைக்கலநாதனின் தந்தை காலமானார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், செல்வம் அடைக்கலநாதனின் தந்தை அடைக்கலம் அமிர்தநாதன் (சித்த வைத்தியர்) , யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (4) ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானார்.

செல்வம் அடைக்கலநாதனின் தந்தையான அடைக்கலம் அமிர்தநாதன் (வயது-83), திடீர் சுகவீனம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (4) அதிகாலை, மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக, யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

அவர் உயிரிழந்த செய்தியை, செல்வம் அடைக்கலநாதன், உறுதிப்படுத்தியுள்ளதோடு இறுதி கிரியைகள் தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Posts