- Monday
- August 17th, 2026
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுள் ஒருவரும் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைப் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களது தந்தையாரின் மறைவையொட்டி, எதிர்க்கட்சித் தலைவரும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான கௌரவ இரா.சம்பந்தன் அவர்களால் விடுக்கப்படும் இரங்கல்...
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் மறைவையொட்டி தமிழ் மக்கள் பேரவை ஆழ்ந்த கவலையடைகிறது. தமது முதல்வரை இழந்து நிற்கும் தமிழக மக்களின் துயரில் ஈழத்தமிழர்கள் சார்பில் தமிழ் மக்கள் பேரவை தனது இரங்கல்களை தெரிவிக்கின்றதோடு உங்களின் துயரையும் பகிர்ந்து கொள்கினறோம். அமரர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஈழத்தமிழர்கள் சார்பில் ஆற்றிய காத்திரமான பங்களிப்புகள்...
தமிழ் நாட்டில் இரும்புப் பெண்மணி என அழைக்கப்படும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு பெரும் இழப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இரங்கல் வெளியிட்டுள்ளார். வால்வெள்ளி ஒன்று அரசியல் வாழ்வில் வானில் பளிச்சென்று பிரகாசமாக தோன்றி, திடீரென மறைந்துவிட்டதாகவும் வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வடமாகாண சபையின் 67 ஆவது அமர்வு இன்று அவைத்...
வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக தொடர்ந்தும் தவராசாவே இருப்பார் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசவையின் 67ஆவது அமர்வு இன்று கைதடியிலுள்ள வடக்கு மாகாணசபைக் கட்டத்தில் நடைபெற்றபோது அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இதனை அறிவித்தார். வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து தவராசாவை நீக்கவேண்டுமென ஈழ மக்கள்...
மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாண நகர வர்த்தக நிலையங்கள் அனைத்தும் இன்று பிற்பகல் 2.00 மூடுமாறு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது. இலங்கையில் தமிழ் மக்கள் அல்லலுறும்போதெல்லாம், இந்திய மத்திய அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வந்ததோடு, தமிழக சட்டசபையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத்...
தமிழ் தேசிய கூட்டமைப்பு தடை செய்யப்படவேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாக செயற்பட்டுள்ளது. இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமானால்...
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டு தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்காவுக்கு எதிரான வழக்கில் சாட்சியளிப்பதற்கே இவர்கள் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு ஜனாதிபதிக்கு மேலதிகமாக முறைப்பாட்டின் சாட்சியாளர்கள் 13 பேருக்கு...
திவிநெகும முறைகேடுகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபர் மீளப்பெற்றுள்ளார். முன்வைக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் சில கோளாறுகள் காணப்படுவதால், மீண்டும் இது குறித்து வழக்குத் தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டார். ஆகவே குறித்த குற்றப் பத்திரிகையை மீளப்...
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெராமின் மறைவு தமிழ்நாடு மக்களுக்கு மாத்திரமல்லாமல் இலங்கை தமிழ் மக்களுக்கும் பாரிய இழப்பாகும் என எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவு தொடர்பில் அவர் விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது “இலங்கை தமிழ் பேசும் மக்களின் பிச்சினைகள் தொடர்பில் அவர் விசேட கவனம் செலுத்தினார். இது தமிழ்நாடு சட்டமன்றத்தில்...
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவையொட்டி நாளை நடைபெறவிருந்த கச்சதீவு புதிய புனித அந்தோனியார் ஆலய திறப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது. யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த திறப்பு விழா பிற்போடப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பங்குதந்தை வணக்கத்திற்குரிய அன்டனி ஜெயரஞ்சன் அறிவித்துள்ளார். நாளைய தினம் நடைபெறவிருந்த திறப்பு விழாவில்...
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்கு வட மாகாண சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், 2 நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் அஞ்சலி உரையை நிகழ்த்தினார். வட மாகாண சபையின் 67வது அமர்வு இன்றைய தினம் பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்று வருகின்றது. இன்றைய சபையமர்வின் ஆரம்பத்திலேயே முதலமைச்சர் செல்வி...
வாகன சாரதிகள் இழைக்கும் குற்றங்கள் தொடர்பில் வழங்கப்படும் தண்டனைகள் மற்றும் அபராதம் குறித்து புதிய சுற்றறிக்கையை வௌியிட, எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பிலான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் வாகன சாரதிகள் இழைக்கும் குற்றங்கள் தொடர்பில் வழங்கப்படும் தண்டனைகள் மற்றும் அபராதத்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நாளை (06) ஆரம்பமாகவுள்ளதாகவும், வரலாற்றில் அதிகூடிய மாணவர்கள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கமைய நடைபெறவுள்ள இப்பரீட்சையில் சுமார் ஏழு லட்சம் பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். இதற்காகவேண்டி 65524 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள 5669 பரீட்சை நிலயங்களில்...
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பிரம்படிக் கிராமத்தில் மின்சார வசதியை ஏற்படுத்தித்தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2009 ஆண்டு நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த நிலையில், 2012 ஆம் ஆண்டு அங்கிருந்து அழைத்து வரப்பட்டனர். எனினும் இவ்வாறு அழைத்து வரப்பட்ட கேப்பாப்புலவு மக்கள், அவர்களது சொற்த இடங்களில் குடியமர்த்தப்படாது...
அனுராதபுரம் கொக்கிராவ மாமினியாவ விகாரை மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றதாகவும், தாக்குதல் நடாத்தப்பட்டபோது குறித்த விகாரையில் எவருமே இருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலாளிகள் விகாரைக்குள் சென்றும் அங்கிருந்த சிலைகள் அனைத்தையும் உடைத்துள்ளதாக கொக்கிராவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இரவு நேரங்களில் விசேட அதிரடிப் படையினரின் ரோந்து நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சுமார் 10 எண்ணிக்கையைக் கொண்ட இந்த விசேட அதிரடிப் படையினர், நகரப் பகுதிகளின் வீதிகளில் ரோந்து செய்து வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் மாவீரர்தினம் அனுஸ்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வீதி...
டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளமையினால் இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை விரைவில் அதிகரிப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். டொலர் விலை அதிகரிப்பு காரணமாக நாடு பெரும் பொருளாதார நெருக்கடியொன்றுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் எனவும் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறியுள்ளார்.
நாட்டில் காணப்பட்ட புரிந்துணர்வின்மையே பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திருந்ததென குறிப்பிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தற்போதைய தேசிய அரசாங்கத்திலேயே தமிழர்களுக்கு நிச்சயமாக தீர்வு கிடைக்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கிளிநொச்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அதிகார சபை அங்குரார்ப்பணம் மற்றும் உறுப்பினர் ஊக்குவிப்பு நிகழ்வில்...
வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட நிர்வாகங்களில் ஊழல் அற்ற செயற்பாடுகளை மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் வெற்றியடைய முடியவில்லை என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியின் நேருக்கு நேர் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபையின்...
13ஆவது திருத்தச் சட்டத்தை முறையாக அமுல்படுத்தினால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கலாம் என்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் கருத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முரண்பட்டுள்ளார். கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் கணேசலிங்கத்தின் நினைவுதினம், கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது, 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினால் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கலாமென அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்....
Loading posts...
All posts loaded
No more posts
