முள்ளிவாய்க்கால் பகுதியில் புதைக்கப்பட்ட இரண்டு இரும்பு பெட்டகங்கள்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் கரைதுறைப்பற்று பொதுச்சந்தை பகுதியில் புதைக்கப்பட்ட இரண்டு இரும்புப் பெட்டகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதியில் சந்தை ஒன்றை பிரதேச சபை அமைக்கும் பணியில் கிடங்கு வெட்டும் போது குறித்த பெட்டகங்கள்கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து நேற்று பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் பிரதேச சபையினரின்...

நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட இராணுவ அதிகாரி யாழில் உள்ள படை வீரர்களை நிர்வகிக்கின்றார்!!

யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள படைவீரர்களை மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாரத்ன நிர்வகிக்கிறார். இவர் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட இராணுவ அதிகாரியென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து பாரிய அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. இதுவே தென்னிலங்கையில் நிகழ்ந்திருந்தால் நிலமை வேறானதாக இருக்கும் என்றும் பிரதமர்...
Ad Widget

ஜெயாவைப் போலவே பன்னீர்செல்வம், ஸ்டாலினும் செயற்பட வேண்டும்!

இலங்கை விடயத்தில், ஜெயலலிதா ஜெயராமைப் போன்று, தமிழகத்தின் புதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் செயற்பட வேண்டும் என, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் கொள்கையைப் போலவே, ஈழத் தமிழர் விடயத்தில் இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், பன்னீர்செல்வம்...

வடமாகாண அமைச்சர்கள் மீதான முறைப்பாட்டு கால எல்லை ஒரு கிழமை நீடிப்பு

வடமாகாண அமைச்சர்களின் ஊழல் குற்ற சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்ட குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டு உள்ளது. வடமாகாண சபையின் 67 ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது முதலமைச்சரினால் , அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலான குற்ற சாட்டை விசாரணை செய்ய...

வடக்கு கடலுக்குள் இலங்கைக்கொடியுடன் ஊடுருவி மீன்பிடிக்கும் சீன மீனவர்கள்!

வட மாகாண கடற்பரப்புக்குள் இலங்கையின் தேசியக்கொடியை பறக்கவிட்டவாறு ஊடுருவி சீன கப்பல்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைளில் ஈடுபட்டுவருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கடற்தொழில் அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு...

கலைமாணித் தேர்வு வெளிவாரிப் பரீட்சைகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் கலைமாணித் தேர்வு பகுதி 1 - 2013 (வெளிவாரி) பரீட்சையை, எதிர்வரும் 14ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரீட்சைகள் தொடர்பான நேர அட்டவணைகளையும் பரீட்சை அனுமதி அட்டைகளையும் நாளை 08ஆம் திகதி தொடக்கம் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் அலுவலக...

கறுப்பு சால்வையுடன் அவையில் சிவாஜிலிங்கம்

மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கறுப்பு சால்வை அணிந்து, வடமாகாண சபையின் அமர்வில் இன்று சபை அமர்வில் கலந்து கொண்டார்.

த.தே.கூ மீது தாக்குதல்: மூவருக்கு மரண தண்டனை

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி, இருவரை படுகொலை செய்ததுடன் 20 பேர் வரை காயமடைந்தனர். குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று எதிரிகளுக்கும் இரட்டை மரண தண்டனையும் பத்து வருட சிறைத் தண்டனையும் விதிக்க வேண்டும் என்று சட்ட மாஅதிபர் சார்பில் பிரதி அரச...

உப்பளங்கள் தனியார் மயமாக்குவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று 07-12-2016 புதன் கிழமை மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். காலை ஒன்பது மணிக்கு ஆனையிறவு உப்பளத்திற்கு முன்பாக ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பளங்களின் சுற்றயல் கிராம மக்கள் அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் ஆனையிறவு...

பஷிலுக்கு எதிராக மீண்டும் குற்றப்பத்திரிகை

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட இருவருக்கு எதிராக மீண்டும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சட்டமா அதிபரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 50 இலட்சம் பஞ்சாங்கக் கலண்டர்களை அச்சிட திவிநெகும நிதியில் 29 மில்லியன் ரூபா செலவிட்டமையால், அரசாங்க நிதியை மோசடி செய்ததாக, பஷில் ராஜபக்ஷ...

கருணாவுக்கு பிணை கிடைத்தது!

முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதம நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரச வாகனத்தை துஷ்பிரயோகம் செய்ததாக கூறி, கடந்த 29ம் திகதி நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட கருணா, பின்னர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். மேலும், கடந்த ஐந்தாம் திகதி அவரது...

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமைக்கு ரணில் மன்னிப்பு கோரினார்

யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மன்னிப்பு கோரியுள்ளார்.1981ம் ஆண்டில் யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டமைக்காக மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்துள்ளார். குறித்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்காக மன்னிப்பு கோருமாறு கூட்டு எதிர்க்கட்சியினரிடமும் அவர் கோரியுள்ளார். 1981ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த போது யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதாகவும் இது பிழையானது...

முஸ்லிம்கள் அரேபியாவுக்கு செல்ல தயாராகுமாறு ஞானசார தேரர் எச்சரிக்கை

மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமை பிக்கு சுமனரத்ன தேரரின் சுகதுக்கங்களை விசாரிப்பதற்காக சென்ற தங்களை தடுத்து நிறுத்திய ஸ்ரீலங்கா பொலிஸாருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பேரினவாத அமைப்பான பொதுபல சேனா அறிவித்துள்ளது. சிங்கள மக்களிடம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் காயப்படவே இவ்வாறான தடைகள் சூழ்ச்சிகரமாக விதிக்கப்படுவதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர்...

பரீட்சைக்கு தோற்றிய மாணவிகள், ஃபர்தா அணிய கூடாது என கூறியதால் சர்ச்சை

முல்லைத்தீவு மாவட்டத்தில் கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய முஸ்லீம் மாணவிகளுக்கு ஃபர்தா அணியக் கூடாது என பரீட்சை மேற்பார்வையாளர்கள் ஏனைய அதிகாரிகள் பணித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படடுள்ளது. பரீட்சை மத்திய நிலையமாக செயற்படும் தண்ணீற்று முஸ்லீம் மகா வித்தியாலத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவிகளே இந்த நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபர்தாவை அகற்ற மறுத்தால் சுட்டெண்களை பரீட்சை...

‘சுவாமிநாதன் பதவி துறக்கவேண்டும்’

தன்னுடைய அமைச்சுப் பதவியை முறையாக செய்யமுடியாவிடின், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், தன்னுடைய அமைச்சுப் பதவியை துறக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பரீட்சைத் திணைக்களத்தின் பொறுப்பற்ற செயலால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள்

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகள் பத்து மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் வெளியிடாமல் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் பொறுப்பற்ற முறையில் காலங்கடத்தி வருகின்றமையால் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளுக்காகக் காத்திருக்கும் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனை இலங்கைக் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் தெரியப்படுத்தப்பட்ட போதிலும் அவர்கூட சரியான நடவடிக்கை எடுக்காமல் பொறுப்பற்ற முறையில்...

யாழ் மக்கள் துணிந்து தமது குறைகளையும் பிரச்சினையும் சமர்ப்பிக்க முடியும்

யாழ் மாவட்ட பொதுமக்கள் துணிந்து தமது குறைகளையும் பிரச்சினையும் வழங்குவதற்கு பொதுமக்கள் குறைகேள் நிலையத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ் மேலதிக அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். குறைகள் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாகவோ, மேலதிக அரசாங்க அதிபரிடமோ, 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது கடிதமூடாகவோ தொடர்புகொள்ளுமாறும் தகவல் அவர் தெரிவித்துள்ளார். இவற்றை வழங்குபவர்கள் தொடர்பிலான விபரங்கள...

மீள்குடியேற்ற பணிகளுக்காக 14 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு! அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்

வடக்கு மற்றும் கிழக்கு இரண்டு மாகாணங்களிலும் 4464 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இதே வேளை இக்காலப்பகுதியில் 2473 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளன. மீள்குடியேற்ற நடவடிக்கைக்காக 14 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாகாணங்களிலும் 171 உட்பாதைகளும், 29 பாடசாலைகளும் 23 வைத்தியசாலைகளும் 41...

ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு இலங்கையில் எதிர்ப்பு

நாட்டில் ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு அனுமதியளிக்கும் முடிவுக்கு, இலங்கை கத்தோலிக்க திருச்சபை இணங்கப் போவதில்லை என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஓரினச் சேர்க்கை திருமணம் நாட்டின் கலாச்சாரத்திற்கு பொருந்தாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே கத்தோலிக்க திருச்சபை என்ற ரீதியில்...

ஈழத் தமிழ் மக்களிற்கு நீதியும் உரிமையும் கிடைக்க ஒலித்த குரல் ஓய்ந்தது

தமிழ் நாடு முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களது மறைவுச் செய்தி பாரத தேசத்திற்கு மட்டுமல்ல உலகெங்கும் வாழும் ஈழத் தமிழ் மக்களுக்கும் பேரதிர்ச்சியையும், பேரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய உபகண்டத்தில் பரந்து விரிந்து கிடக்கும் பாரத தேசத்தில் சுமார் ஏழரைக் கோடி மக்களைக் கொண்ட தமிழ்நாடு மாநிலத்தின் ஈடு இணையற்ற தலைவியாக விளங்கிய மாண்புமிகு...
Loading posts...

All posts loaded

No more posts