இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் பயணப்படகு சேவை ஆரம்பம்!

இலங்கைக்கும் - இந்தியாவுக்கும் இடையிலான பயணப்படகு சேவையை மீண்டும் ஆரம்பிப்பதான கூட்டு தொழில் முயற்சிக்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் பயணப்படகு சேவையை மீண்டும் ஆரம்பிக்க தயாரென MMBL-Pathfinder Group குழுமம் பயணப்படகு சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணப்படகு சேவையில் முன் நிலை வகிக்கும் MMBL-Pathfinder Group குழுமம இத்துறையில் முன் நிலை...

நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபருக்கு இரட்டை மரண தண்டனை

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது 2001 ஆம் ஆண்டு தாக்குதல் நடாத்தியமை தொடர்பான வழக்கில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ள நெப்போலியன் எனும் நபர் பிரபல ஊடகவியலாளரான மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் ஆவார். கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி இரவு 8 மணியளவில் நிமலராஜன் வீட்டில்...
Ad Widget

வடக்கில் புலிகளின் அச்சுறுத்தல்!இராணுவத்தை வெளியேற்ற முடியாது

கடந்த அரசாங்கமானது முன்னாள் போராளிகளுக்கு முறையான ரீதியில் புனர்வாழ்வளிக்காமல் விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அதனால் வடக்கிலிருந்து எக்காரணம் கொண்டும் இராணுவத்தை வெளியேற்ற முடியாதென குறிப்பிட்டுள்ளார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் செலவீனங்கள் தொடர்பான குழுநிலை விவாதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தினால் புனரவாழ்வளிக்கப்பட்டவர்கள் எங்கு உள்ளனர் என தெரியாத...

விபத்தில் அருந்தவபாலன் காயம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன், விபத்தொன்றில் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக புதன்கிழமை (07) அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, பாண் விற்பனையில் ஈடுபடும் சிறிய ரக வானுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

சுன்னாகம் இளைஞர் கொலை : பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த சந்தேகநபரை சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலை செய்து, சடலத்தை இரணைமடுக் குளத்தில் போட்ட வழக்குத் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவரை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் அன்டன்...

‘SEX’ தேடலில் இலங்கை தொடர்ந்து முதலிடம்

இணையத்தளத்தில் SEX என்ற வார்த்தையை அதிகமாக தேடும் நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக கூகுல் தெரிவித்துள்ளது. இதன்படி 2011, 2012, 2013, மற்றும் 2014ஆம் 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் கூகுல் இணையத்தளத்தில் SEX சொல்லை அதிகமான தேடிய நாடு இலங்கையாகும். இலங்கையின் மேல் மாகாணத்தில் ஹோமாகம நகரத்தில் இருந்தே இந்த சொல் அதிகளவில் தேடப்பட்டுள்ளது....

‘GallFeceஇல் கோயில் கட்டலாமா?’

இந்து கோயில்கள் மற்றும் விகாரைகள் தொடர்பில், ஜே.வி.பி.யின் எம்.பி.யான விஜித ஹேரத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான ஸ்ரீதரனுக்கும் இடையில், கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில் தற்போது, புத்தசாசன அமைச்சின் மீதான விவாதம், இடம்பெற்று கொண்டிருக்கின்றது. இதன்போதே, இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வடக்கில் புதிதாக பௌத்த விகாரைகள் முளைக்கவில்லை என்று விஜித எம்.பி...

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக 5 முறைப்பாடுகள்

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான குழுவுக்கு இதுவரையில் 5 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
 மாகாண சபையின் 68ம் அமர்வு நேற்று நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாணசபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன், அமைச்சர்கள் தொடர்பான விசாரணை குழுவுக்கு முறைப்பாடுகளை வழங்க மக்கள் சிலர் விரும்பும் நிலையில் விசாரணை குழுவி
ன் கால...

திவிநெகுமவை சமுர்த்தியாக மாற்றும் சட்டமூலம் பாராளுமன்றத்தில்

திவிநெகும என்ற பெயருக்கு பதிலாக சமுர்த்தி என்ற பெயரைப் பயன்படுத்துவது தொடர்பான திவிநெகும திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்று சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் சபை கூடிய போது, அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறித்த சட்டமூலத்தை முன்வைத்தார்.

இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் குறித்து விசாரணைக்கு அழைப்பு

இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்போர் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு கோரிக்கை விடுத்துள்ளது. ஜெனிவாவில் நேற்று வெளியிடப்பட்ட சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் இறுதி அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபையின் 10 பேர் கொண்ட...

வடமாகாண உதவித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் அசமந்தம்

மாகாணசபை உறுப்பினர்களின் ஒதுக்கீட்டில் மக்களுக்கு வழங்கப்படும் உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் அசமந்தப்போக்குடன் செயற்படுவதாக வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வட மாகாணசபையின் மாதாந்த அமர்விலேயே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குறிப்பாக தாம் முன்மொழிந்த மூன்று வேலைத்திட்டங்களை செயற்படுத்த முடியாதென்றும், இறுதி நேரத்தில் வந்து மாற்று வேலைத்திட்டத்தை மூன்று...

7 குற்றங்களுக்கு 25000 ரூபா தண்டப்பணம் உறுதி!

7 குற்ற செயல்களுக்கு தீர்மானிக்கப்பட்ட 25,000 ரூபாய் தண்டப்பணத்தில் எவ்வித மாற்றமும் செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய குறித்த 7 குற்றச்சாட்டுகளுக்கும் சட்டத்தை செற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுதல், சாரதி...

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

மாங்குளம் பனிக்கன்குளம் பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர்களை மாலை 5 மணியளவில் பனிக்கன்குளம் பகுதியில் வீதிகடமையில் ஈடுபட்டிருந்த மாங்குளம் பொலிஸ்நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி...

கொழும்பு துறைமுகத்தில் திடீர் தீ; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

கொழும்பு துறைமுகத்தில் இன்றைய தினம் அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு மற்றொரு நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துறைமுகத்தின் ஊழியர் ஓய்வறைப் பகுதியிலேயே இன்று அதிகாலை தீ பரவியிருப்பதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் 38 வயதுடைய நபரே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தீயணைப்புப் படையினரின் ஒத்துழைப்புடன் தீ கட்டுப்பாட்டிற்குள்...

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தை கலைக்க அமைச்சரவை அனுமதி!

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தைக் கலைக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமாதானச் சூழ்நிலையில், இத்தகைய பாதுகாப்புச் சேவையை முன்னெடுப்பதற்கான தேவையில்லை எனவும் அவரது முன்மொழிவில் தெரிவித்திருந்தார். இதற்கிணங்க, ரக்னா லங்காவால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பணிகளை சிவில் பாதுகாப்பு நிறுவனத்திற்கும்,...

யாழ். நூலகத்தை புலிகளே எரித்தனர்!

யாழ்ப்பாணம் நூலகத்தை தாங்களே எரித்ததாக தமிழ்மக்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கேட்டார். எனினும், அந்த நூலகத்தை புலிகளே எரித்தனர் என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான உதய கம்மன்பில, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தில் சரணடைந்த 12ஆயிரம் புலிகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாது

இறுதி யுத்தத்தில் 12ஆயிரம் புலிகள், பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. இந்நிலையில், வடக்கிலிருந்து பாதுகாப்பு படையினரை குறைக்கமுடியாது என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க, நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்தனர்.

குளத்தில் மூழ்கி சகோதரிகள் பலி

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளத்தில் மூழ்கி 17 மற்றும் 16 வயதுடைய சகோதரிகளான சிறுமிகள் இருவர், நேற்று (07) மாலை உயிரிழந்துள்ளனர். 17 வயதுடைய சிறுமிக்குக் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. குறித்த சிறுமி, சிறுமியின் கணவர் மற்றும் சிறுமியின் சகோதரி, மற்றொருவர் என நால்வர் கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளத்தைப் பார்ப்பதற்குச் சென்றுள்ளனர். அங்கு...

சம்பந்தன் சொன்ன இரகசியம் அம்பலம்

“மாவிலாறு யுத்தம் அறிவிக்கப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றத்தின் களரியில் வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பியுமான இரா. சம்பந்தனை சந்தித்தேன்“ என்று தெரிவித்த கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல, “யுத்தத்தை பிரகடனப்படுத்தியதை இட்டு நாங்கள் பெரும் சந்தோஷம் அடைகின்றோம். ஏனென்றால் அப்போதுதான் தமிழீழத்தை விரைவில் பெற்றுக்கொள்ளலாம்” என்றார்.

பரீட்சை மண்டபத்தில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொண்ட பிரச்சனை தொடர்பில் உரிய நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் முள்ளிப்பொத்தானையில் கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சை நிலையத்துக்கு சென்ற முஸ்லிம் மாணவிகளை பர்தா, ஹிஜாப் போன்றவற்றை கழற்றிவிட்டு வருமாறு தெரிவிக்கப்பட்ட சம்பவம் குறித்து நடவடிக்கை மேற்கொள்வதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கு செய்தியாளர் மாநாடு நேற்று...
Loading posts...

All posts loaded

No more posts