கடந்த அரசாங்கமானது முன்னாள் போராளிகளுக்கு முறையான ரீதியில் புனர்வாழ்வளிக்காமல் விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அதனால் வடக்கிலிருந்து எக்காரணம் கொண்டும் இராணுவத்தை வெளியேற்ற முடியாதென குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் செலவீனங்கள் தொடர்பான குழுநிலை விவாதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தினால் புனரவாழ்வளிக்கப்பட்டவர்கள் எங்கு உள்ளனர் என தெரியாத நிலையில், வடக்கிலிருந்து முழுமையாக இராணுவத்தை வெளியேற்றுவது சாத்தியமில்லையென்றும் நாட்டின் பாதுகாப்பை உச்ச அளவில் பேணுவது அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கு கிழக்கில் செயற்படவேண்டிய பாதுகாப்பு படையினரின் அளவை பாதுகாப்புச் சபையே தீர்மானிக்கும் என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.