Ad Widget

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் பயணப்படகு சேவை ஆரம்பம்!

இலங்கைக்கும் – இந்தியாவுக்கும் இடையிலான பயணப்படகு சேவையை மீண்டும் ஆரம்பிப்பதான கூட்டு தொழில் முயற்சிக்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் பயணப்படகு சேவையை மீண்டும் ஆரம்பிக்க தயாரென MMBL-Pathfinder Group குழுமம் பயணப்படகு சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயணப்படகு சேவையில் முன் நிலை வகிக்கும் MMBL-Pathfinder Group குழுமம இத்துறையில் முன் நிலை வகிக்கும் Aitken Spence and Norled நிறுவனங்களுடன் இணைந்து முதலீட்டு கூட்டு தொழில் முயற்சியாக இதனை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.

இந்தச் சேவை மூன்று நாடுகளின் முதலீட்டு ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்படும். இது தொடர்பான முன்சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டத்தின் கீழ் கொழும்பு, தூதுக்குடி நகரங்களுக்கு இடையில் பயணப்படகு சேவை மற்றும் சரக்குக் கப்பல் சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் பேர்னாட் குணதிலக தெரிவித்தார்.
இரண்டாவது கட்டத்தின் கீழ் தலைமன்னார் மற்றும் இராமேஷ்வரத்திற்கிடையிலான கப்பல் சேவையை மீள முன்னெடுப்பதற்கான திட்டத்தில் கவனம் செலுத்தப்படும். கொழும்பு – திருச்சி கப்பல் சேவையை கொச்சி கேரலா போன்ற முன்ணனி துறைமுக நகரங்களுக்கான சேவை கேள்வியின் அடைப்படையில் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் பயணப்படகு சேவையில 1914ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது பயங்கரவாத செயல்கள் காரணமாக 1980களில் முடக்கப்பட்டது.

இந்தச் சேவைகளை மீளவும் ஆரம்பிப்பதன் மூலம் இருநாடுகளைச் சேர்ந்த மக்களும் பயனடைவார்கள் என திரு.குணதிலக கூறினார். கடந்த ஆண்டு மூன்று இலட்சத்திற்கு மேலான இந்தியர்கள் இலங்கை வந்ததாகவும் இரண்டு இலட்சத்திற்கு மேலான இலங்கையர்கள் இந்தியா சென்றதாகவும் தெரிகிறது.

Related Posts