- Monday
- August 17th, 2026
கடந்த கால யுத்தம் காரணமாகவே பொதுமக்களின் காணிகளை இராணுவம் கைப்பற்றியிருந்ததாகவும் எனினும், யுத்தம் நிறைவடைந்த நிலையில் காணிகளை மக்களிடம் மீளக்கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். பொதுமக்களுக்கும் ஆளுநருக்குமிடையில் நேற்றையதினம் (09) முல்லைத்தீவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2009 ஆண்டுக்குப் பின்னர் கொக்குத்தொடுவாய் முகத்துவாரம்...
யாழ்.கோண்டாவில் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் தனியார் சிற்றூர்தி சாரதிக்கும் மோதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த மோதல் சம்பவத்தில் தனியார் சிற்றூர்தி சாரதியான ரவீந்திரன் ரெனோல்ட் எனும் நபர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலை மேற்கொண்டார் என போக்குவரத்து சபை பேரூந்து சாரதி கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பலாலி வீதி...
வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு அருகில் பிரதான கண்டி வீதியில் நடுவே அமர்ந்து பெண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக பழகிவந்த குறித்த பெண் பணம் கொடுக்கல் வாங்கல்கள் காரணமாகவும் இருவருக்கிடையே இடம்பெற்ற முரண்பாடுகளை அடுத்து பணம்கொடுத்த பெண் பணம் வாங்கிய பெண்ணிற்கும் இடையே...
மாத்தறை நாந்துகலவையைச் சேர்ந்த என்.என். கல்யாணி (வயது 73) என்பவர் நேற்று நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தகவல் தொழிநுட்ப பாடத்தை எழுதியுள்ளார். மாத்தறை , இல்மா பாடசாலையில், நடைபெறும் க.பொ.த. பரீட்சை மண்டபத்தில் இந்த முதுமைப் பெண் பரீட்சை எழுதியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் பின்னரான காலத்தில் வடக்கு கிழக்கில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் பெண்கள் வன்முறைகள் தொடர்பில் நீதித்துறையில் காணப்படும் இழுத்தடிப்புக்களால் பாதிக்கப்படுபவர்கள் சட்ட உதவியை பெற முன்வருவதில்லை எனவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். நாவலர் கலாச்சார மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...
வடக்கில் பெளத்த விகாரைகள் அமைக்கப்படுவதை எதிர்க்கவில்லை எனவும், அடாத்தாக விகாரைகள் அமைக்கப்படுவதையே எதிர்ப்பதாகவும் என வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச, புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக வட மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குப்பைத் தொட்டியில் போடுவதாக தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பாக வடமாகாண சபை பேரவை...
வடக்கில் புத்தர் சிலைகளை அமைக்க இடமளிக்கக்கூடாது என வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் முற்றிலும் தவறானது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பௌத்தர்கள் வாழாத இடத்தில், சட்டவிரோதமான முறையில் பலாத்காரமாக புத்தர் சிலைகளைத் தனியார் காணிகளில் இராணுவத்தினரின் துணையுடன் அமைப்பதையே வடமாகாண சபை கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நீதியமைச்சர்...
வடக்குக் கிழக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றபோதிலும், அங்குள்ள பொதுமக்கள் இராணுவத்தினரின் பிரசன்னத்தையே விரும்புகின்றனர் என பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, பூநகரிப் பிரதேசங்களில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் திட்டத்தின்கீழ் சூரியசக்தியினால் இயங்கும் இயந்திரங்கள் கையளிக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றையதினம்...
வடக்குக் கிழக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 80 வீதமான வீடுகளை செங்கல்லினால் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் வீட்டுத் திட்ட இழுபறி நிலமை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வடக்கு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிவைப்பதில் தமக்கு எந்தப் பிரச்சனையுமில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்....
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காணிப்பிணக்குகளைத் தீர்த்துவைப்பதற்கு நேற்று வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் விசாரணையொன்று நடைபெற்றது. இந்த விசாரணையில் 125 காணிப்பிணக்குகள் வடக்கு மாகாண ஆளுநரால் தீர்த்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதன்போது வடமாகாண ஆளுனர், ஆளுனர் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வடமாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட...
புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக, மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவைப் பெறுவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலின்போது சிறீலங்கா அரசாங்கம்...
பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகள் சம்பந்தமாக விசாரணை ஒன்றை நடத்தி அது தொடர்பில் சரியான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை தீர்மானித்திருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் செயற்பாடுகள் பிரச்சினைக்குறிய வகையில் இருப்பதாக இன்று கூடிய அரசியலமைப்பு பேரவையில் பேசப்பட்டுள்ளது. அண்மையில் இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களை எதிர்வரும்26ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் இ.சபேசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனை அடுத்து குறித்த 12 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 23ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்...
ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த காலத்தில் எத்தனைபேரை இல்லாமல் செய்தார் என எங்களுக்கு தெரியும் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா பெரியதம்பனை கிராமத்தில் நேற்று (வியாழக்கிழமை) கிராமிய சுகாதார நிலையத்தை திறந்து வைத்த பின், அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலம்...
வவுனியா - உலுக்குளம் மகாவித்தியாலயத்தில் பிறிதொரு நபருக்காக க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுதிய அரச பாடசாலை ஆசிரியர் ஒருவர் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா மின்சார சபையில் பணியாற்றும் நபரொருவர் சாதாரண தரப்பரீட்சையில் தோற்றுவதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில் அவருக்கான அனுமதி அட்டையும் கிடைத்திருந்தது. இந்நிலையில் மின்சாரசபையில் பணியாற்றும் குறித்த நபர், கைதுசெய்யப்பட்டுள்ள சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கடமைபுரியும்...
வடக்கில் விடுதலைப் புலிகளின் காலத்தில் உள்நுழையாத போதைவஸ்து பாவனை, இன்று அதிகளவில் உள்நுழைந்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார். கடற்கரை பகுதிகள் முழுவதும் கடற்படையினரின் ஆதிக்கத்துக்குள் இருக்கும் நிலையில், போதைவஸ்து பாவனை எவ்வாறு வடக்கை நோக்கி வருவதாகவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். வட மாகாண மீன்பிடி அபிவிருத்திக்கான இணை முகாமைத்துவ செயற்பாட்டின் ஆரம்ப விழா,...
வடபகுதி கடற்பரப்பில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் உதவியுடன் அத்துமீறும் தென்னிலங்கை இழுவைப் படகுகளை விரட்டியடிப்பதற்கு ஆயுதம் ஏந்துவதை தவிர வேறு எந்த வழியும் இல்லை என்று வடமாகாண கடற்தொழில் சமூகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அட்டகாசங்களை விட கடலுடன் எவ்வித தொடர்பும் இல்லாத இராணுவத்தின் அட்டீழியங்கள் அதிகரித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். வடமாகாண கடற்தொழிலாளர் இணையம்,...
சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான வயது அல்லது கட்டணத்தில் அதிகரிப்பை ஏற்படுத்துவதற்கான எந்த தீர்மானமும் அரசிடம் இல்லையென்று மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான குறைந்த வயது 25 ஆகவும் அதற்கான கட்டணம் 25,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று சில சாரதி பயிற்சி நிலையங்களால் பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக மோட்டார்...
அரிசியின் விலை உயர்வடைந்துள்ளது. பண்டிகைக் காலம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் அரிசியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நுகர்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 60 முதல் 65 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஸ்டீம் அரிசி 80 முதல் 85 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சம்பா அரிசி 90 முதல் 95 ரூபா வரையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகக்...
யாழ்.பல்கலைகழக தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவ வழக்கு விசாரணை மாணவர்கள் பரஸ்பரம் சமாதானமாக செல்வதாக மன்றில் தெரிவித்ததை அடுத்து வழக்கு விசாரணை முடிவுறுத்தப்பட்டு உள்ளது. யாழ்.பல்கலைகழக விஞ்ஞான பீட முதலாம் வருட மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு கடந்த யூலை மாதம் 16ம் திகதி நடைபெற்றது. அந்நிகழ்வில், சிங்கள மாணவர்கள் கண்டிய நடனம் இணைத்து...
Loading posts...
All posts loaded
No more posts
