Ad Widget

ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லை!

வடபகுதி கடற்பரப்பில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் உதவியுடன் அத்துமீறும் தென்னிலங்கை இழுவைப் படகுகளை விரட்டியடிப்பதற்கு ஆயுதம் ஏந்துவதை தவிர வேறு எந்த வழியும் இல்லை என்று வடமாகாண கடற்தொழில் சமூகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

fish

அட்டகாசங்களை விட கடலுடன் எவ்வித தொடர்பும் இல்லாத இராணுவத்தின் அட்டீழியங்கள் அதிகரித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

வடமாகாண கடற்தொழிலாளர் இணையம், வடமாகாண மீன்பிடி அமைச்சு மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் வடமாகாண மீன்பிடி அபிவிருத்திக்கான இணைமுகாமைத்துவ செயற்பாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள ரில்கோ விடுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கடற்தொழில் சமூகத்தினராலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடபகுதி கடற்பரப்புக்குள் வரும் இழுவைப்படகுகளின் தொகை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய கடற்தொழிலாளர்கள், பல தடவை அத்துமீறிய இந்திய மீனவர்களை குறித்த கடற்பரப்பை விட்டு துரத்தியதாகவும் சிலரைக் கைதுசெய்ததாகவும் தெரிவித்தனர்.

ஆனால் அத்துமீறி பிரவேசிக்கும் தென்னிலங்கை மீனவர்களது இழுவைப்படகுகளை தம்மால் எதுவும் செய்யமுடியாதுள்ளதாகவும், அவர்கள் தம் கண்முன்னே சுதந்திரமாக மீள்பிடித்துச் செல்கின்ற நிலையில் அதனை எதிர்க்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் தாங்கள் உள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு அத்துமீறும் ஒவ்வொரு தென்னிலங்கை இழுவைப்படகுகளிலும் இராயுவத்தினர வருவதமாக சுட்டிக்காட்டிய மீனவர்கள், தென்னிலங்கையின் இழுவைப்படகுகளுக்கு கடற்படையினர் வழங்கும் அனுசரணையை விடவும் கடலுடன் சம்மந்தப்படாத இராணுவத்தினர் வழங்கும் அனுசரணை தம்மை அச்சமடைய வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

முதலில் இராணுவம் மற்றும் கடற்படையினருடைய உதவியுடன் தமது கடல்வளத்தை சுரண்டிச்செல்லும் இழுவைப்படகுகள் மற்றும் சாதாரண படகுகளின் வருகையைத் தடைசெய்ய வேண்டும் எனவும் இல்லலாவிட்டால் அவர்களை விரட்டுவதற்கு ஆயுதம் ஏந்துவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை இந்தநிகழ்வில் கலந்துகொண்ட வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய இணைப்பாளர் ஹர்மன் குமார, தேசிய மீனனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் ஏ.ஜேசுதாஸன் ஆகியோர் மீனவர்களது பிரச்சனையைத் தீர்ப்பது தொடர்பில் தமது கருத்துக்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts