- Saturday
- May 9th, 2026
கொடிகாமம் பகுதியில் கேரள கஞ்சா கொண்டு செல்ல முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொஸிசார் தெரிவிக்கின்றனர் குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 8 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சந்தேகநபர்கள் இருவரும் மோட்டார் வாகனத்தில் பயணித்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும், பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒரு இலட்சம்...
யாழ்ப்பாணம், ஐந்து சந்திப் பகுதியில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் செவ்வாய்க்கிழமை (22) மாலை ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர் சண்டிலிப்பாய் பகுதியினை சேர்ந்த 24 வயதுடைய நபர் என பொலிஸார் கூறினார். சந்தேகநபரிடம் இருந்து 53 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்கும் மீட்கப்பட்டது. கிடைக்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்...
'எனக்கு சிங்களத்தில் யார் கடிதம் அனுப்பினாலும், அதனை கிழித்து, எனக்கு அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பி விடுவேன்' என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாணசபையின் 66ஆவது அமர்வு நேற்றுச் வியாழக்கிழமை (24) இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய அவைத்தலைவரின் கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சபையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உரையாற்றும் போது, 'வடமாகாணத்தில்...
கிளிநொச்சி கணகாம்பிகை குளத்தில் மக்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பொருத்தமற்ற இடத்தில் சுடலை அமைத்துள்ளமையால் மழைக்காலங்களில் புதைக்கவும் முடியாது எரிக்கவும் முடியாத நிலையில் இருப்பதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனா். இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது பாடசாலைக்கு அருகில் மக்களின் குடியிருப்புக்களுக்கு நெருக்கமாக புதிய சுடலை அமைக்கும் பணியை அரசியல் தரப்புக்கள் மேற்கொண்ட போது அதற்கு மக்கள்...
இந்தியா சென்ற நிலையில், திருப்பி அழைக்கப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளியான நடராஜா சபேஸ்வரன் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி விவேதனி சபேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாகவும், கிளிநொச்சியில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி வழங்கினார் என்று...
போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை எந்த பெயரைக் கொண்டு நினைவுகூர்ந்தாலும் பிரச்சினை இல்லை. ஆனால் மாவீரர்களை நினைவுகூர முடியாது எனஅரசாங்கம் அறிவித்துள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் கடந்த முறை முன்னெடுக்கப்பட்ட மாவீரர் தினத்தில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே கலந்து கொண்டதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன, இம்முறை எத்தனை பேர் கலந்துகொள்வார்கள்...
வடக்கு மாகாண சபைக்குள் இடம்பெறும் செயற்பாடுகள் எவையும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படுவதில்லையெனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்களே வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமையில்லை என பொதுமக்கள் தெரிவிப்பதற்கான முக்கிய காரணம் என வடக்கு மாகாணசபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர் ம. தியாகராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையால் வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் தொடர்பாக...
யாழ். மாவட்டத்தில் பொலிஸார் வசமுள்ள அசோகா விடுதி, வீடுகள் மற்றும் காணிகளை மீள மக்களிடம் கையளிப்பது தொடர்பில் பொலிஸ் மா அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த ஒருபகுதி காணி, அண்மையில் பொது மக்களின் மீள்குடியேற்றத்திற்காக பாதுகாப்பு பிரினரால் விடுவிக்கப்பட்டது. இருப்பினும்...
ஜனாதிபதி, பிரதம அமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமற்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் ஆகியோருக்கென, கொழும்பில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லங்களின் எண்ணிக்கை 57ஆகும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஜே.வி.பியின் எம்.பியான பிமல் ரத்னாயக்க கேட்டிருந்த கேள்விகளுக்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்...
“‘எல்.ரீ.ரீ.ஈ தலைவரொருவர் இருக்கிறார். அவரை, நாளை கொல்லப்போகிறோம். போவோமா?’ என, கருணா அமைப்பைச் சேர்ந்த சாமி என்பவர் கேட்டார். அதற்கு நான், சரி எனக் கூறினேன்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் முதலாவது சாட்சியாளரான பிருதிவிராஜ் மனம்பேரி, நேற்றுப் புதன்கிழமை (23), கொழும்பு...
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் பிரதான வீதியில், கிளிநொச்சி இந்துக்கல்லூரிக்கு அருகில் உள்ள பாலம் நிர்மாணிக்கப்படாமையால், வெள்ள நீர் நிரம்பி பிரதேச மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மாணவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கும் குறித்த வீதி, மழைக் காலங்களில் வீதி எங்குள்ளது, பள்ளங்கள் எங்குள்ளன என்பது தெரியாத அளவிற்கு காட்சியளிக்கின்றது. அண்மைய...
யாழ்.வலிகாமம் வடக்கு தையிட்டி- ஊறணி பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கடற்பகுதியில் கடற்தொழில் மேற்கொள்வதற்கு அனுமதிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். எனினும் படையிரை கரையோரத்திலிருந்து வெளியேற்றுவது கடினம் எனவும், ஆனால் படையினருடன் இணங்கி மக்கள் கடற்றொழிலை செய்ய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கடந்த 04 ஆம் திகதி வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து...
யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கான நிதியை குறைத்துவிட்டு தேசிய நல்லிணக்கம் குறித்து அரசாங்கம் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனுடன் பேசுவதாக மக்கள் விடுதலை முன்னணி சாடியுள்ளது. கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாத்த்தில் பங்கேற்று உரையாற்றிய போது மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பனர் விமல் ரத்நாயக்க இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், யாழ்...
அச்சுவேலி பிரதேசத்தில் நிலம் கீழிறங்குதல் தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் அச்சுவேலி பிரதேசத்தில் காணப்படும் நிலப்பிரதேசமானது நிலத்தை விட கீழிறங்கியமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பிலான காரணங்களை தெளிவுபடுத்திக் கொள்வதற்கும், குறித்த நிலப்பகுதியை எதிர்காலத்தில் பயன்படுத்துவது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் தேசிய கட்டிட ஆய்வு அமைப்பின் மூலம் ஆய்வினை மேற்கொள்வதற்கு, மீள்...
தமிழ் மக்கள் பேரவையால் நடாத்தப்பட்ட எழுக தமிழ் பேரணியின் இரண்டாவது பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான வைத்தியக் கலாந்தி லக்ஸ்மன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையினால் நேற்றைய தினம் கொழும்பில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,...
தற்போது பெய்து வரும் கடும்மழை காரணமாக, பூநகரி, மண்டைக்கல்லாறு ஏ - 32 (யாழ்ப்பாணம் - மன்னார்) வீதியை ஊடறுத்து, நீர் பாய்வதால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, இந்தப் பகுதியூடாக 1 அடிக்கும் மேலாக நீர் பாய்கின்றது. இதனால் இப்பகுதியூடாக கனரகங்களைச் செலுத்திச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வீதியினூடாக...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிள்ளைகள், கல்விகற்ற ஆர்வமாக உள்ளனர். அதனால் தான், யாழ்ப்பாணத்தில் இரு தனியார் மருத்துவக் கல்லூரிகளை நியமிக்குமாறு, அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்று, சபை முதல்வரும் உயர்க்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்றத்தில் சற்றுமுன் தெரிவித்தார்.
அனுமதி பத்திரமின்றி பஸ் செலுத்தினால் 2 இலட்சம் ரூபாய் தண்டத்தை அறவிடுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.
வர்த்தக நிலையங்களில் எதிர்வரும் காலங்களில் சில்லறை முறையில் சிகரெட்டுக்களை விற்பனை செய்வதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும், plain white சிகரெட் பக்கற்றுக்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சர் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்...
பருவ நிலை மாற்றத்தால் உலகில் 48 நாடுகள் நீரில் மூழ்கும் ஆபத்து நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகில் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் பூமி அதிக அளவு வெப்பமாகி வருகிறது, இதன் காரணமாக பனிப்பாறைகள் உருகுகின்றன. அவை தண்ணீராக மாறி கடல் நீரில் கலக்கின்றன. இதனால் கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதே நிலை நீடிக்குமானால், பூகோள...
Loading posts...
All posts loaded
No more posts
