தெஹிவளை விலங்கியல் பூங்காவை இரவுப் பூங்காவாக மாற்றத் திட்டம்

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு தேசிய புத்தாண்டுக்கு முன்னர் தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவை இரவுப் பூங்காவாக மாற்றுவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார். மிருகங்களை கூடுகளில் அடைத்து வைக்காது, அவை சுதந்திரமாக நடமாடும் வகையில் இந்த விலங்கியல் பூங்கா மூன்று கட்டங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் அவர்...

யாழில் நான்கு கொள்ளையர்களுக்கு விளக்கமறியல்

யாழ்.மாவட்டத்தில் பகல் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 4 பேரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 21 பவுண் நகைகள், ஒரு மடிகணனி, டிஜிட்டல் கமரா ஆகியவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ். நகரை அண்டிய பகுதிகளில் பொலிஸ் அதிகாரி ஸ்ரீகயன் தலைமையில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி...
Ad Widget

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் அனுட்டிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இன்று 12.00 மணியளவில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்களினால் மாவீரர்களை நினைவுகூர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது. எதிர்வரும் 27 ஆம் திகதி தமிழினத்தின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய வீரர்களின் நினைவுநாள்...

இலங்கையில் தினமொன்றுக்கு 800 கருக்கலைப்புச் சம்பவங்கள்

இலங்கையில் நாளொன்றுக்கு, 1100-1200 வரையில் சிசுக்கள் பிறக்கும் அதேவேளையில், 700-800 வரையிலான கருக்கலைப்புச் சம்பவங்களும் இடம்பெறுவதாக, தென் மாகாண சுகாதார திணைக்களத்தின் தொற்றுநோய் பிரிவுக்கான வைத்தியர், நளனி விஜேசேகர தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “இலங்கையில் கருக்கலைப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நாளொன்றுக்கு...

லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஆசிரியருக்கு பிடியாணை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஆசிரியர் பிரதீப் சந்திரருவன் சேனாதீரவைக் கைதுசெய்வதற்கான சர்வதேசப் பிடியாணையை கம்பஹா நீதவான் இன்று பிறப்பித்துள்ளார். இந்த இணையத்தள ஆசிரியர்; விமான நிலையத்தை வந்தடையும் வேளையில் கைதுசெய்யுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு கம்பஹா நீதவான் உத்தரவிட்டார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் சுவரொட்டி

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகள் நேற்று இரவு ஒட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சுவர்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் மாவீரர் நாள் நவம்பர் 27 யாழ் பல்கலைக்கழக சமுகம், மற்றும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

மாவீரர் துயிலும் இல்லங்கள் சிரமதானம்; மாகாணசபை உறுப்பினர்கள் பங்கேற்பு

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்ளைச் சிரமதானம் செய்யும் பணிகள் அப்பகுதி மக்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிரமதான பணிகள் இன்று காலை வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிரமதானப் பணிகளில் அப்பகுதி மக்கள் மற்றும் வடமாகாண கல்வியமைச்ச குருகுலராசா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில், தேராவில் ஆகிய பகுதிகளில் மொத்தமாக...

யார் தடுத்தாலும் பொருத்து வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பேன்!

வடக்கு மாகாண மக்களுக்கான பொருத்து வீட்டுத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட எந்தத் தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தாலும் நான் அத்திட்டத்தை அமுல்படுத்தியே தீருவேன் என மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன பொருத்து வீட்டுத் திட்டத்தை நிறுத்தியுள்ளார் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது. வடக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ்த் தேசியக்...

இணையத்தள வரி அதிகரிப்பு!

வழமையான தொலைபேசி அழைப்புகளிற்கு மாறாக இணையத்தளத்தினூடாக மக்கள் தொடர்புகளை மேற்கொள்கின்றமையே இணையத்தளத்திற்கான வரி அதிகரித்துள்ளமைக்கான காரணம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இருப்பினும் அத்தொகை அதிகமானது அல்லவெனும் அவர் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரியப்படுத்தியிருந்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், எம்மோடு தொலைபேசி நிறுவனங்கள் நடாத்திய பேச்சுவார்த்தையின்போது தொலைபேசி அழைப்புகளிற்குப் பதிலாக அதிகமானோர் வைபர்...

முல்லைத்தீவில் மீண்டும் காணி சுவீகரிப்பில் படையினர்!

முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் கடற்படைத் தளம் அமைந்துள்ள நிலப்பகுதியினை புதிய சரத்தின் கீழ் அபகரிக்கும் பொது அறிவித்தல் நேற்றுமாலை பிரதேச செயலாளரினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியில் உள்ள பொதுமக்களிற்குச் சொந்தமான 617 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கடற்படை முகாம் பகுதியினை முழுமையாக அபகரிக்க இதுவரை காலமும் காணி சுவீகரிப்பின் 38 ஏ யின்...

தமிழினிக்கு தலைவணங்கும் தென்மாகாண ஆளுநர்!

சமூகங்களில் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில் உண்மைகளைத் தனது நூலின் மூலம் வெளிக்கொணர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிரணி பொறுப்பாளர் தமிழினி ஜெயக்குமாரனுக்கு தலைவணங்குகின்றேன் என தென் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். சேர்.பொன்.இராமநாதனின் ஜனன தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி காலிநகரில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறித்த...

சுன்னாகம் இளைஞர் கொலை வழக்கு யாழ்.மேல்நீதிமன்றுக்கு மாற்றம்!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுப்பில் இருந்த சுமன் எனும் இளைஞன் சித்திரவதை செய்யப்பட்டபின் கொல்லப்பட்டு பின்னர் சடலத்தினை இரணைமடுக் குளத்தில் போடப்பட்ட வழக்கு நேற்று கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் அதனை கிளிநொச்சி நீதவான் யாழ் மேல் நீதிமன்றிற்கு பாராப்படுத்தியுள்ளார். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுப்பில் இருந்த இளைஞர் சித்திரவதை செய்யப்பட்ட பின்...

பாடசாலைக்கு அருகில் சிகெரட்டுகள், புகையிலை உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யத் தடை

நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில், அதாவது, பாடசாலையிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவுக்குள், சிகெரட்டுகள் மற்றும் புகையிலை உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யத் தடை விதிக்கப்போவதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அத்துடன், சுண்ணாம்பு மற்றும் பாக்கு விற்பனைக்கு எதிராகவும், கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க, நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார். புகையிலை...

‘மாவீரர்’ என்ற நாமத்தைச் சூட்டுவது தொடர்பில், மக்களே சிந்தித்துத் தீர்மானமெடுக்க வேண்டும்”

“வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூருவது தவறல்ல. ஆனால், அவர்களுக்கு, ‘மாவீரர்’ என்ற நாமத்தைச் சூட்டுவது தொடர்பில், மக்களே சிந்தித்துத் தீர்மானமெடுக்க வேண்டும்” என்று, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். “யுத்தத்தில் உயிரிழந்தவர்ளுக்கு பூஜைகள் செய்து, அவர்களை நினைவு கூருங்கள்....

ரவிராஜ் எம்.பி கொலை வழக்கு: சுட்டுக் காட்டினார் சாட்சியாளர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் மீது, 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதியன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டபோது, செனவிரத்ன என்ற சந்தேகநபர், கறுப்புநிறப் பையினுள் ரி-56 ரகத் துப்பாக்கியை வைத்து எவ்வாறு சுட்டார் என்பதை, முதலாவது சாட்சியாளரான மனம்பேரிகே பிருதிவிராஜ் சம்பத், கொழும்பு மேல்நீதிமன்றத்தில், நேற்று வியாழக்கிழமை செய்துகாட்டினார்....

2017ம் ஆண்டுக்கான வடமாகாணத்தின் பாதீட்டு அறிக்கை தாக்கல்

வடக்கு மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான நிதிக்கூற்று அறிக்கையை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்றயதினம் சமர்ப்பித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் அறுபத்தேழாவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது முதலமைச்சர் நிதிகூற்று அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார். இதன்போது, 2017 ஆம் ஆண்டின் வட மாகாண சபை...

புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையானோரில் பட்டதாரிகளாக வெளியேறியுள்ள 35 ​பேருக்கு, முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்க வேண்டும் எனக் கோரிய பிரேரணை, வட மாகாண சபையில் ஏகமனதாக, நிறைவேற்றப்பட்டுள்ளது. வட மாகாண சபையின் 66வது அமர்வு வியாழக்கிழமை, அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இப் பிரேரணையை முன்மொழிந்தார். இறுதி...

யாழில் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் தொழில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்!

யாழ் மாவட்டத்திலுள்ள நிலங்களில் சூழலுக்கு பாதிப்பினை உண்டுபண்ணாத வகையில், சுண்ணக் கற்களை அகற்றினால்தான் பயிர்ச் செய்கையினை மேற்கொள்ளவோ, ஏனைய கட்டிடப் பணிகளை மேற்கொள்ளவோ முடியும் என்கின்ற நிலையில், யாழ் மாவட்டத்தில் சுண்ணக் கற்களை அகழ்தல் மற்றும் உழவு இயந்திரங்களில் ஏற்றி, இறக்குதல் தொடர்பில் விஷேட ஏற்பாடாக நியாயமானதொரு நடைமுறை செயற்படுத்தப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக்...

சுமனரத்ன தேரருக்கு எதிராக வட மாகாண சபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றம்

வடக்கு. கிழக்கு மாகாணங்களில் அத்துமீறி பெளத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றமை மற்றும் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இன துவேசமாக நடந்து கொண்டமை தொடர்பாக இன்றைய தினம் வட மாகாண சபையில் கண்டனம் தெரிவித்து, தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு வட மாகாண சபை அமர்வில் பிரசன்னமாகியிருந்த சிங்கள மாகாண சபை உறுப்பினர்களால்...

நீதிபதி இளஞ்செழியனை விமர்சித்த வவுனியா ஜக்சன் யாழில் கைது

வவுனியாவினில் போலி விஞ்ஞானியாக அடையாளப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய நபரான என்.என்.ஜக்சன் என்பவர் மீண்டும் யாழில் வைத்து கைதாகியுள்ளார். முன்னதாக நிதி மோசடி தொடர்பில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவர் தற்போது யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட்டதாகக் கைதாகியுள்ளார். விசாரணை தவணையொன்றிற்காக வந்திருந்த அவர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு வெளியில் வைத்து...
Loading posts...

All posts loaded

No more posts