யாழ்ப்பாணம் செம்மணி மயானத்திற்கருகிலும், பருத்தித்துறை குடத்தனை மயானத்திற்கருகிலும் 60 இலட்சம் பெறுமதியான கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணப் பிராந்திய போதைப்பொருள் முறியடிப்புப் பிரிவுக் காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த பிரதேசங்கள் சுற்றிவளைக்கப்பட்டு குறித்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
வெளிமாவட்டம் ஒன்றுக்குக் கடத்திச் செல்வதற்காக யாழ்ப்பாணம் செம்மணி மயானத்திற்கருகிலுள்ள குப்பைமேட்டில் குப்பைகள்போன்று 7 கஞ்சாப் பொதிகள் வீசப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் பருத்தித்துறைப் பிரதேசத்திற்குட்பட்ட குடத்தனை வடக்கு மயானத்திற்கருகில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 8 கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இவற்றின் மொத்தப் பெறுமதி 62 இலட்சம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.