Ad Widget

புலிகள் காலத்தில் உள்நுழையாத போதைவஸ்து கடற்படையின் கட்டுப்பாட்டில் அதிகரிப்பு

வடக்கில் விடுதலைப் புலிகளின் காலத்தில் உள்நுழையாத போதைவஸ்து பாவனை, இன்று அதிகளவில் உள்நுழைந்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.

கடற்கரை பகுதிகள் முழுவதும் கடற்படையினரின் ஆதிக்கத்துக்குள் இருக்கும் நிலையில், போதைவஸ்து பாவனை எவ்வாறு வடக்கை நோக்கி வருவதாகவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

வட மாகாண மீன்பிடி அபிவிருத்திக்கான இணை முகாமைத்துவ செயற்பாட்டின் ஆரம்ப விழா, வட மாகாண கடற்றொழிலாளர் இணையம், வட மாகாண மீன்பிடி அமைச்சு மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள ரில்கோ ஹோட்டலில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அனந்தி சசிதரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 


போதைவஸ்து பாவனை வடக்கை நோக்கி வரும்போது கடற்படையினர் என்ன செய்கின்றார்கள் என்றும் இதற்கு யார் உடந்தையாக இருக்கின்றார்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை, கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரைப் பிரதேசங்கள் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடற்தொழில் செய்கின்றவர்கள் 1990 ஆம் ஆண்டில் இருந்து முகாம்களில் தங்கி, கூலி வேலைக்கு செல்கின்ற நிலை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணத்தில் மகளிர் விவகாரம் என்பது பேச்சளவில் உள்ளதே தவிர, அதற்கான அதிகாரமோ செயற்பாடுகளோ இல்லை என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

Related Posts