Ad Widget

பரீட்சைக்கு தோற்றிய மாணவிகள், ஃபர்தா அணிய கூடாது என கூறியதால் சர்ச்சை

முல்லைத்தீவு மாவட்டத்தில் கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய முஸ்லீம் மாணவிகளுக்கு ஃபர்தா அணியக் கூடாது என பரீட்சை மேற்பார்வையாளர்கள் ஏனைய அதிகாரிகள் பணித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படடுள்ளது.

பரீட்சை மத்திய நிலையமாக செயற்படும் தண்ணீற்று முஸ்லீம் மகா வித்தியாலத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவிகளே இந்த நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபர்தாவை அகற்ற மறுத்தால் சுட்டெண்களை பரீட்சை திணைக்களத்திற்கு அனுப்பி, பரீட்சை பெறுபேறுகளை வெளிவராமல் தடுப்போம் என பரீட்சை மேற்பார்வையாளர்கள் அச்சுறுத்தியதாக முஸ்லீம் மகா வித்தியால ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கையானது மாணவிகளின் பரீட்சையை பாதித்துள்ளதாகவும் உளரீதியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமயத்தையும் கலாசாரத்தையும் நசுக்கும் வகையில் இந்த செயற்பாடு அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பரீட்சை நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உட்பட, வலய கல்வி பணிமனையின் அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts