Ad Widget

வடக்கு கடலுக்குள் இலங்கைக்கொடியுடன் ஊடுருவி மீன்பிடிக்கும் சீன மீனவர்கள்!

வட மாகாண கடற்பரப்புக்குள் இலங்கையின் தேசியக்கொடியை பறக்கவிட்டவாறு ஊடுருவி சீன கப்பல்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைளில் ஈடுபட்டுவருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கடற்தொழில் அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மீனவர்கள் பல சவால்களுக்கு மத்தியிலேயே தமது வேலைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதிலும் விசேடமாக வடக்கு கடற்பரப்பு எல்லையில் இந்திய , தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி பிரவேசிக்கின்றனர் என்பதையும் அவர் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

அவர்கள் சட்டவிரோதமான முறையில் இலுவைப் படகுகளைப் பயன்படுத்துவதால் இப்பகுதியில் உள்ள மீன்வளம் அழிவடைந்து வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அண்மைக்காலமாக சீனப் படகுகள் இலங்கை தேசிய கொடியை ஏந்தியவாறு வடக்கில் மீன்பிடிக்கின்றன. இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts