Ad Widget

மின்சார வசதியைப் பெற்றுத்தருமாறு கேப்பாபுலவு மக்கள் கோரிக்கை

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பிரம்படிக் கிராமத்தில் மின்சார வசதியை ஏற்படுத்தித்தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2009 ஆண்டு நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த நிலையில், 2012 ஆம் ஆண்டு அங்கிருந்து அழைத்து வரப்பட்டனர்.

எனினும் இவ்வாறு அழைத்து வரப்பட்ட கேப்பாப்புலவு மக்கள், அவர்களது சொற்த இடங்களில் குடியமர்த்தப்படாது சூரியபுரம் காட்டுப்பகுதியில் இராணுவத்தால் உருவாக்கப்பட்ட மாதிரிக் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த மாதிரிக் கிராமத்தில் இருந்து 15 குடும்பங்கள் கேப்பாப்புலவு பிரம்படிப் பகுதியில் குடியேறினர்.

கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்திற்கும் கேப்பாப்புலவு இராணுவ முகாம்களிற்கும் மின்சாரம் செல்லும் நிலையில், பிரம்படியில் உள்ள தமது வீடுகளுக்கும் மின்சாரத்தை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் வற்றாப்பளை சந்தி வரை வந்து செல்லும் பேருந்துகளை கேப்பாப்புலவு கிராமம் வரை வந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts