Ad Widget

வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றமில்லை!

வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக தொடர்ந்தும் தவராசாவே இருப்பார் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசவையின் 67ஆவது அமர்வு இன்று கைதடியிலுள்ள வடக்கு மாகாணசபைக் கட்டத்தில் நடைபெற்றபோது அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இதனை அறிவித்தார்.

வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து தவராசாவை நீக்கவேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்த நிலையில், தவராசாவை நீக்கிவிட்டு தவநாதனை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளரால் வடக்கு ஆளுநர் ஊடாக பதில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இதனிடையே, தனக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களது பெரும்பான்மை ஆதரவு உள்ளதாக தவராசா அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தினார்.

இதனையடுத்து, நாடாளுமன்ற நடைமுறைகள், ஏனைய மாகாணசபையின் முன்னுதாரணங்கள் மற்றும் உறுப்பினர்களின் ஆதரவைக் கருத்தில் கொண்டு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவராக தவராசாவே நீடிப்பார் என அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

Related Posts