Ad Widget

காயமடைந்த இராணுவ அதிகாரிக்கு அனுராதபுரத்திலு சிகிச்சை

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ் வண்டி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த இராணுவ அதிகாரி அனுராதபுரம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தனியார் பஸ் உரிமையாளர்களின் சேவை பகீஷ்கரிப்பின் போதே இந்த தாக்குதல் சம்பவம் இடமபெற்றுள்ளது.

இதே வேளை தனியார் பஸ் உரிமையாளர்களின் சேவை பணிப்பகிஸ்கரிப்பு நடைபெற்ற தினத்தன்று இலங்கை போக்குவரத்துச் சபையின் வருமானம் 12 கோடி ரூபாவரை அதிகரித்திரு;பபதாக அதன் தலைவர் ரமால் சிறிவர்த்தன தெரிவித்துள்ளார். வழமையாக சபையின் நாளாந்த வருமானம் 6 கோடி 60 லட்சம் ரூபாவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

பணிப் பகிஷ்கரிப்பு இடம்பெற்ற தினத்தில் சேவையில் ஈடுபட்ட இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களுக்கு இடர்கொடுப்பனவு ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. காயமடைந்த போக்குவரத்துச் சபை ஊழியர்களின் மருத்துவ செலவினங்களை போக்குவரத்துச் சபை ஏற்றுக்கொள்ளும். இதற்குத் தேவையான நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. தாக்குதல் காரணமாக சேதமடைந்த போக்குவரத்துச் சபையின் பஸ் வண்டிகள் பற்றிய செலவின மதிப்பீட்டு அறிக்கை வழங்குமாறு அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா போக்குவரத்துச் சபையின் தலைவரைப் பணித்துள்ளார்.

இத்தினத்தில் சேவையில் ஈடுபட்ட போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக 128 பஸ் வண்டிகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. 23 பணியாளர்கள் காயமடைந்துள்ளனர். 8 பிரயாணிகளும் காயமடைந்துள்ளனர்.சேதமடைந்த அனைத்து பஸ் வண்டிகளும் போக்குவரத்துச் சபையின் செலவில் திருத்தப்படும். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related Posts